village – VSKDTN News https://vskdtn.org Tue, 16 Aug 2022 09:46:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/ https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/#respond Tue, 16 Aug 2022 09:46:57 +0000 https://vskdtn.org/?p=16748 சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை என நீதிபதி கூறினார். விருதுநகர், வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

]]>
https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/feed/ 0
விவசாயியின் வாழ்க்கை https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/ https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/#comments Mon, 14 Jun 2021 12:58:25 +0000 https://vskdtn.org/?p=6629 விவசாய கிராமம். தினசரி மக்கள் வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். மழை எப்பொழுது பெய்யும் என எதிர்பார்த்து இருப்பார்கள். மழை பெய்தால் தான் விவசாயம் செய்யமுடியும். விவசாயம் ஆரம்பித்தாலும் தண்ணிருக்காக காத்திருக்க வேண்டும். கிணறு தோண்டினாலும் தண்ணிர் தேவையான அளவு இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் மாடசாமி தம்பதிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் வயலிலே தான் இருப்பார்கள். ஒழுங்காக சாப்பிடுவதில்லை. மூன்று குழந்தைகள். வனஜா, குமார் மற்றும் ரவி மூன்றுபேரும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். படிக்க வைப்பதே கஷ்டமாக இருக்கிறது.

இந்த சூழலில் வனஜா நன்றாக படிக்கிறவள். 10ம் வகுப்போடு நின்றுவிடுகிறாள். அப்பா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். தம்பிகள் படிக்கட்டும். இல்லை அம்மா நி 10ம் வகுப்பில் 90சதவிதம் மார்க் வாங்கியிருக்கிறாய். நாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நீ படியம்மா என்றார். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு பிடிவாதமாக படிக்க மறுத்து அப்பாவிற்கு விவசாயத்தில் உதவி செய்கிறாள். மூன்று பேரும் கஷ்டப்பட்டு இருவரையும் படிக்க வைக்கிறார்கள். சில நாட்களில் 2பேரும் குடும்ப கஷ்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். உடனே குழந்தைகள் அப்பா நாங்கள் பெரிய ஆள் ஆனபிறகு உங்கள் இருவரையும் கஷ்டப்படாமல் காப்பாற்றுவோம் என்பார்கள். இருவரும் படித்து அரசாங்க வேலை கிடைத்தது.

உடனே அக்காவிற்கு ஒரு விவசாயியை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் அதே ஊரைச் சேர்ந்த விவசாயிக்கு. உழைத்து உழைத்து அப்பா, அம்மா உடம்பு பலகீனமாகிறது. இருந்தாலும் மனதில் ஒரு சந்தோஷம். பசங்க இரண்டு பேருக்கும் வேலை கிடைத்ததே என்று. பெரிய பையன் குமாருக்கு வேலைக்கு ஏற்றவாறு பணக்கார வீட்டில் பெண் கிடைக்கிறது. ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பா என் மனைவிக்கு இந்த வீட்டு சூழ்நிலை பிடிக்கவில்லை. நாங்கள் தனிக்குடித்தனம் போகிறோம் என்றார். சரி பரவாயில்லை. நீ சந்தோஷமாக இரு என்றார்.

ஒரு வருடம் முடிந்தது. ரவிக்கு திருமணம் ஏற்பாடு. பெண் பார்க்கும் வேலை ஆரம்பித்தது. அண்ணனுக்கு பெரிய இடத்தில் திருமணம் நடந்தது. அவா;கள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள். நம்ம அளவில் பார்ப்போமே என்றார். ரவி பேங்கில் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்கிற பெண்ணையே திருமணம் செய்ய முடிவு செய்கிறார். வீட்டில் பேசி திருமணம் நடக்கிறது. வீட்டில் இருந்து வேலைக்கு போவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆதலால் பேங்க் அருகிலேயே வீடு பார்ப்போம் என்று ஒரு வாரத்திலேயே. இந்த சூழலில் சொத்தை பாகப்பிரிவினை செய்து கேட்கிறார்கள். அப்பா வேண்டாம் என்றார். அம்மா பரவாயில்லை நம்ம பிள்ளைகள் தானே என்றாள். விருப்பம் இல்லாமல் பிரித்து கொடுக்கிறார். மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆள் வைத்து விவசாயம் செய்து வருமானத்தை அவரவர்கள் பிரித்து எடுக்கிறார்கள். சாப்பிட வழியில்லை. இரண்டு மகன்களும் ஒருவேளை கூட அம்மா அப்பாவிற்கு உணவு கொடுக்க தயாரில்லை.

இந்த நேரத்தில் அம்மா வருத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். ஆடம்பரமாக வெளி உலகிற்கு தெரியும் படி இறுதிசடங்குகள் மற்ற சடங்குகள் நிறைவு பெறுகிறது. அவா;கள் இருவரும் சென்றுவிட்டார்கள். உணவிற்கு வழியில்லை. வனஜா கூப்பிடுகிறாள். அப்பா என்னுடைய வீட்டிற்கு வாருங்கள். நாங்கள் சாப்பிடுவதில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். அப்பா கவலைப்படாதே என்னுடன் வாருங்கள் என்றாள். பரவாயில்லை அம்மா நீ அழைத்ததே சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டார். குமார் மற்றும் ரவி கவலைப்படவில்லை. ஆனால் வனஜாவிற்கு வருத்தம். எப்படி கஷ்டப்பட்டு பலநாள்கள் அவர்கள் சாப்பிடாமலே எங்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள் என்று பள்ளிப்பருவத்தை நினைத்து பார்க்கிறாள். ஒரு வருடம் ஆகிவிட்டது.

பலபேர்கள் அப்பாவை கேரளத்தில் பார்த்தேன். கோவிலில் பிச்சை எடுக்கிறார் என்று செய்தி மகன்களுக்கு கிடைக்கிறது. மேலும் 6 மாதம் ஆகிவிட்டது. கேரளா பம்பர் லாட்டரி பிச்சைக்காரனுக்கு 10 கோடி பரிசு கிடைத்தது என்ற செய்தி விசாரித்து குமார் மற்றும் ரவி இரண்டு பேரும் கேரளம் செல்கிறார்கள். விசாரிக்கிறார்கள். கோவிலில் இருந்த பிச்சைக்காரன் இப்பொழுது அங்கு இல்லை. எங்கு போயிருக்கிறான் என்று தெரியவில்லை. 6 வருடம் கழித்து கையில் ஒரு கமண்டலத்தோடு வருகிறார். தோளில் ஒரு தோள்பை. எங்கு சென்றாலும் இந்த இரண்டையும் யாரிடமும் கொடுக்கமாட்டார். பக்கத்து தோட்டக்காரன் விட்டிற்கு போகிறார். அவர்கேட்கிறார். உங்களுக்கு கேரளா பம்பா; லாட்டரி பரிசு 10 கோடி கிடைத்ததா? பேப்பரில் செய்தி வந்தது என்றார். அப்படியா நடந்த விவரத்தை சொன்னார் மாடசாமி. நான் கேரளாவிற்கு போனது உண்மைதான் கோவிலில் இருந்தேன். ரிஷிகேஷில் இருந்து ஒரு சன்னியாசி வந்தார். அவர்என்னை அழைத்து சென்றார். நான் ஆஸ்ரமத்தில் இருந்தேன். சன்னியாசியிடம் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சொன்னேன். நீ கவலைப்படாதே நான் ஒரு கமண்டலம் தருகிறேன். அதை நீ எங்கு சென்றாலும் கொண்டு செல்ல வேண்டும். யாரிடமும் கையில் கொடுக்கக்கூடாது என்றார். நீ ஊருக்கு போய்வா என்றார். அதன்படி வந்தேன் என்றார். அப்பா வந்த செய்தி மகன்கள் காதிற்கு எட்டுகிறது. அப்பாவைத்தேடி வருகிறார்கள். அப்பாவிடம் பேசுகிறார்கள். என்னுடன் வாருங்கள் என்றான் குமார். ரவி என்னுடன் வாருங்கள் என்றான். இரண்டு மகன்களும் பேசி ஒரு மாதம் ஒரு வீட்டில், ஒரு மாதம் இன்னொரு விட்டில் இருங்கள். நாங்கள் உங்களை கவனிக்கிறோம் என்றார்கள். பக்கத்து தோட்டக்காரரிடம் போய் சொல்கிறார். அவர்கள் விருப்பப்படியே போகிறேன். ஆனால் நான் இறந்தபிறகு என்னுடைய இறுதி சடங்கு எல்லாம் முடிந்த பிறகு ஊர் தலைவன் முன்னிலையில்தான் இந்த கடிதத்தை பிரிக்க வேண்டும் என்ற கண்டிசனோடு போகிறார்.

மாதத்தில் ஒரு நாள் மகள் வீட்டிற்கு போவார். மகன்கள் கொடுக்கக்கூடிய காசை சேமித்துவைத்து மகளுக்கு கொடுப்பார். திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார். காரியங்கள் முடிந்துவிட்டது. ஊர் கூடியது. கமண்டலம் இரண்டு கவா; இருக்கிறது. ஒன்று வனஜாவிற்கு. இன்னொன்று குமார் மற்றும் ரவிக்கு. ஊர் தலைவருக்கு ஒரு கடிதம். அதில் இதைத்தான் முதலில் பிரிக்க வேண்டும். இன்னொன்று பொதுவாக எல்லோர் மத்தியிலும் வாசிக்க வேண்டும் என்று அதன்படி வனஜாவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அவள் பிரித்து தனியாக மனதுக்குள் படிக்கிறாள். வனஜா நீ கவலைப்படாதே நீ ஏழ்மையானாலும் என்னை, அப்பா என் வீட்டில் இருங்கள் நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்றாயே. அந்த வார்த்தையே நீ என்னை காப்பாற்றியது போல் ஆகிவிட்டது. உனக்கு கடவுள் எல்லா ஆசியும் அளிப்பார்.

உனக்காக ஒரு 20 ஆயிரம் காப்பீட்டு பத்திரம் பக்கத்து தோட்டக்காரரிடம் கொடுத்திருக்கிறேன். அதை நீ வாங்கிக்கோ என்று எழுதியிருந்தார். கடிதத்தை மூடிக்கொள்கிறாள் அமைதியாக இருக்கிறாள். ஊர் மத்தியில் இன்னொரு கடிதம் பிரிக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. ஊர் மக்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஏற்பட்ட ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எந்த காரணத்தைக்கொண்டும் உயிரோடு இருக்கும்போது சொத்தை பிரித்துக்கொடுக்ககூடாது. எதுவாக இருந்தாலும் தங்களுடைய காலத்திற்கு பிறகு தான் கொடுக்கவேண்டும். ஆகையால் இந்த கமண்டலத்தில் உள்ளதை குமார் மற்றும் ரவிக்கு சமமாக பிரித்து கொடுக்கவும். அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு வேளை உணவுகூட கொடுக்கவில்லை என்றாலும் கடைசிநேரத்தில் அவா;களுக்காக சம்பாதித்து கமண்டலத்தில் வைத்திருக்கிறேன். இருவருக்கும் கொடுக்கவும் என்று எழுதியிருந்தது. மருமகள்கள் மாறிமாறி பார்க்கிறார்கள். நாம் எவ்வளவு கொடுமைபடுத்தியும் நமக்காக அவருக்கு கிடைத்த லாட்டரி தொகையை நிதியாக மாற்றி கமண்டலத்தினுள் வைத்து இருக்கிறார் என்று சுத்தியல் கொண்டு வரப்படுகிறது. கமண்டலத்தின் வாய் பகுதி வெட்டி திறக்கப்படுகிறது. அதில் கங்கை தீர்த்தம் வைக்கப்பட்டுள்ளது. தலைவர் எடுத்து குமாருக்கும் ரவிக்கும் கொடுத்துவிட்டு ஊர் மக்கள் கலைந்து செல்கிறார்கள். இரண்டு மருமகளும் சேர்ந்து மாமனாரையும் கணவனையும் குடும்பத்தையும் திட்டிவிட்டு கோவத்தில் வீட்டில் இருந்து வெளியே போகிறார்கள். குமாரும், ரவியும் சிரிக்கிறார்கள். வனஜா கேட்கிறாள். என்ன தம்பி சிரிக்கிறாய் என்று, உடனே குமார் சொன்னான். அக்கா நாங்கள் அப்பா கேரளாவில் பிச்சை எடுக்கிறார் என்ற செய்தி கேட்ட அன்று எனக்கு இரவில் தூக்கமே இல்லை. அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நம்மை வளர்த்தார். நாம் இப்படி ஆயிட்டோமே என்ற வருத்தம் இரவில் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் ரவிக்கு போன்செய்து நாம் அப்பாவை போய் பார்ப்போம் என்றேன்.

அவனும் சம்மதித்தான். இரண்டு பேரும் கேரளா சென்றோம். அங்கு அப்பா கோவிலில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்ததும் இரண்டு பேரும் அப்பாவை கட்டிப்பிடித்து அழுதோம். எங்களுக்கு குடும்பத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் தான் மனைவி சொன்னதை கேட்டு உங்களை துரத்தி விட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள் அப்பா என்றார்கள். நீ அக்கா விட்டில் இருங்கள். நாங்கள் செலவிற்கு காசு தருகிறோம் என்றோம். அதனால் என்ன? பரவாயில்லை அப்பா. நீங்கள் மூவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். நான் தீர்த்த யாத்திரை முடித்துவிட்டு வருகிறேன. எனக்கு எப்பொழுது காசு தேவைப்படுமோ அப்பொழுது நான் கேட்கிறேன் என்றார். அவர்கையில் ஒரு போன் கொடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து போன் வந்தது. நான் இந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறேன் என்றார்.

அதன்படி நாங்கள் அடிக்கடி போன் செய்து விசாரிப்போம். தேவையான காசு அனுப்பி கொடுப்போம். ஒரு நாள் உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. டிக்கெட் எடுத்து அனுப்பு என்றார். நாங்களும் அனுப்பி வைத்தோம். நாங்கள் சொன்னபடிதான் அப்பா இங்கு வந்து கமண்டலத்தையும் பையையும் கீழே வைக்காமல் இருந்தார். நாங்கள் உனக்கு காசு கொடுப்பதற்கு அப்பாவிற்கு பணம் கொடுப்போம். அதைத்தான் அப்பா உன்னிடம் வந்து கொடுப்பார். இப்பொழுது அப்பாவை கடைசிவரைக்கும் கவனித்த சந்தோஷம். வேறுயாருக்கோ கிடைத்த லாட்டரி பரிசுத்தொகையை அப்பாவிற்குதான் பரிசு கிடைத்தது என்று மனைவியை நம்ப வைத்தோம். அதனால் வீட்டில் நிம்மதி மட்டுமல்ல, காசுக்காக போட்டிபோட்டு கவனித்தார்கள் என்று கூறினார். குமார் ஏதோ நாம் மூவரும் சொன்னபடி அப்பாவை கடைசி வரைக்கும் கவனித்தோம். சந்தோஷம் என்று கூறி மூவரும் கிளம்பிவிட்டார்கள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/feed/ 2
கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள் https://vskdtn.org/2021/06/12/kirama-koyil-poosarikal-venbdukol/ https://vskdtn.org/2021/06/12/kirama-koyil-poosarikal-venbdukol/#comments Sat, 12 Jun 2021 06:55:39 +0000 https://vskdtn.org/?p=6549 சம்பளம் இல்லா கோயில் பணியாளர்களுக்கு வழங்குவதை போல, 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் என கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள்.

கோயில்களில் சம்பளம் இல்லா பணியாளர்களுக்கு 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் வழங்குவதை போல, ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத கோயில் பூசாரிகள் தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் குடும்பம் நடத்தவே போராடி வரும் சூழ்நிலையில் சமாளிக்க அரசு அந்த தொகுப்பு வழங்க வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/06/12/kirama-koyil-poosarikal-venbdukol/feed/ 4