கல்வி – VSKDTN News https://vskdtn.org Fri, 21 Jan 2022 11:43:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்து தர்மம் குறித்து புதிய பாடப்பிரிவுகளைத்துவக்கும் பனாரஸ் பல்கலைகழகம் https://vskdtn.org/2022/01/21/hindu-dharma/ https://vskdtn.org/2022/01/21/hindu-dharma/#respond Fri, 21 Jan 2022 11:42:47 +0000 https://vskdtn.org/?p=11114 பனாரஸ் பல்கலைகழகம்(BHU) M.A Hindu studies என்னும் புதிய பாடப்பிரிவை துவக்க உள்ளது. இந்த பாட நெறி இந்து தர்மத்தின் அறியப்படாத பல நெறிகளை உலகிற்கு உணர்த்தும் என அப்பல்களைகழகத்தைச்சேர்ந்த வி.கே.சுக்லா தெரிவத்துள்ளார். இப்பாடபிரிவில் “இந்து மற்றும் பிராமணியம்,” “இந்து தர்மத்தின் வெளிநாட்டு வம்சாவளியின் மூலம் ” மற்றும் “இந்து என்ற சொல்லின் வரலாறும் அதன் பொருளும்” ஆகிய தலைப்பில் பாடங்கள் இடம் பெறும் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/01/21/hindu-dharma/feed/ 0
புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்-புதுவை ஆளுநர் பேச்சு https://vskdtn.org/2022/01/20/new-education-policy/ https://vskdtn.org/2022/01/20/new-education-policy/#respond Thu, 20 Jan 2022 12:02:37 +0000 https://vskdtn.org/?p=11073 புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.
புதுவை பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மனிதனின் உடல்,மனம்,ஆன்மா இவை அனைத்திலும் உள்ள சிறந்ததைக்கொண்டு வருவதே கல்வி. மகாத்மா காந்தியின் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த்துவதற்காகவே புதிய கல்விக்கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் எனக்கூறினார்.

]]>
https://vskdtn.org/2022/01/20/new-education-policy/feed/ 0
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது வித்யாபாரதியின் முக்கிய கடமை- வித்யாபாரதி இணை அமைப்பாளர் பேச்சு https://vskdtn.org/2022/01/01/vidya-bharathi-nep/ https://vskdtn.org/2022/01/01/vidya-bharathi-nep/#respond Sat, 01 Jan 2022 12:09:52 +0000 https://vskdtn.org/?p=10393          தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவது வித்யா பாரதியின் முக்கிய பொறுப்பாகும் என்று வித்யா பாரதியின் அகில பாரதிய இணை அமைப்பாளர் கோவிந்த் மகந்த்ஜி கூறியுள்ளார். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதன் ஒரு அங்கமாக ஜலந்தரில் நான்கு நாட்கள் ஆசிரியர் பயிற்சி பட்டறை டிசம்பர் 30ம் தேதி துவங்கியது. இதை துவக்கி வைத்து பேசிய கோவிந்த் மகந்த்ஜி தேசிய கல்விக்கொள்கை கல்வி இந்திய மயமக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வித்யாபாரதி வடக்கு மண்டல பொதுச்செயலாளர் தேஷ்ராஜ் சர்மா,துணைத் தலைவர் சுரேந்திர அத்ரி மற்றும் வித்யாபாரதி பஞ்சாப் தலைவர் ஜெய்தேவ் வதீஷ் ஆகியோர் கோவிந்த் மஹந்த் ஜிக்கு மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

]]>
https://vskdtn.org/2022/01/01/vidya-bharathi-nep/feed/ 0
12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லை: போலிச்செய்தி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: சிபிஎஸ்இ அறிவுறுத்தல் https://vskdtn.org/2021/12/14/no-grace-mark-for-cbse-accountancy-exam/ https://vskdtn.org/2021/12/14/no-grace-mark-for-cbse-accountancy-exam/#respond Tue, 14 Dec 2021 12:16:50 +0000 https://vskdtn.org/?p=9720 12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுத்தாளில் ஏற்பட்ட பிழையால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் போலி ஆடியோ குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

     “டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற 12-ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முதல் பருவ தேர்வு கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, சிபிஎஸ்இ, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் என்ற பெயரில் ஆடியோ செய்தியை மேற்கோள் காட்டி போலியான செய்திகள் பரப்பப்படுவதாக வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 06 கருணை மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்று ஆடியோ செய்தியில் உள்ளதாக தெரிகிறது. இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று வாரியம் தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/12/14/no-grace-mark-for-cbse-accountancy-exam/feed/ 0
பொறியியல் கல்விக்கு நுழைவு தேர்வு வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – கல்வியாளர் பாலகுருசாமி. https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/ https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/#respond Mon, 19 Jul 2021 11:08:11 +0000 https://vskdtn.org/?p=7743 இன்ஜினியரிங் படிப்பின் தரம் குறைந்து விட்டதாலும் பள்ளிகளில் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதாலும் நுழைவு தேர்வை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் 2005ல் 220 இன்ஜி. கல்லுாரிகள் இருந்தன. தற்போது 520க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை முடிக்கின்றனர்.

ஆனால் இன்ஜினியரிங் பட்டம் பெறுவோரில் 80 சதவீதம் பேர் படைப்பாக்க சிந்தனை கள அறிவு வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் போன்றவற்றில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு போன்றவற்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதால் நுழைவு தேர்வு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார் பாலகுருசாமி.

]]>
https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/feed/ 0
நீட் தேர்வில் சமூகநீதி மற்றும் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது – புள்ளிவிவரங்களுடன் பாஜக பொறுப்பாளர் கனகசபாபதி. https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/ https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/#comments Tue, 06 Jul 2021 12:56:01 +0000 https://vskdtn.org/?p=7400 ‘நீட்’ தேர்வால் சமூகநீதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால், திராவிட கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக நாடகமாடுகின்றன என, புள்ளி விபரங்களுடன், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு, 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் கம்யூ., கட்சிகள், அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்துவிட்டு, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

”நீட் தேர்வு குறித்து சரியாக புரிந்து கொள்ள, தமிழக மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள், இடப்பகிர்வு பற்றிய அடிப்படை விபரங்கள் மற்றும் நீட் தேர்வால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ”இவற்றால், நீட் தேர்வு உண்டாக்கியுள்ள கள மாற்றங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்,” என்கிறார், தமிழக பா.ஜ., மாநில துணை தலைவர் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி.
கனகசபாபதி கூறியதாவது: தமிழக அரசு வெளியிட்டுள்ள, 2020ம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறித்த ஆதாரங்களில் இருந்து, மாநிலத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்கள், 3,650. அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஐ.ஆர்.டி.டி., வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், 619. தமிழக மாணவர்களுக்கான பிரத்யேக இடங்கள், 3,031. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு (7.5 சதவீதம்) 227 இடங்கள் மற்றும் பொது ஒதுக்கீட்டுக்கான இடங்கள், 2,804.

தமிழக அரசு, 2020ம் ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதனால், அரசு இடஒதுக்கீடு (சதவீதத்தில்) பொதுப் பிரிவு-31, பிற்படுத்தப்பட்ட பிரிவு-27, பிற்பட்ட வகுப்பு-முஸ்லிம்கள் -3, மிகவும் பிற்பட்ட பிரிவு-20, பட்டியலின வகுப்பு- 17, பட்டியலின வகுப்பு அருந்ததியர்-3, மலைவாழ் மக்கள்-1 சதவீத இடங்கள்.

இதன்படி கிடைத்த இடங்களின் விகிதாசாரம், பொதுப்பிரிவு-0, பிற்பட்ட பிரிவு-34.4, பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்- 5.3, மிகவும் பிற்பட்ட வகுப்பு-35.2, பட்டியலின வகுப்பு-20.7, பட்டியலின வகுப்பு அருந்ததியர்-3.5, மலைவாழ் மக்கள்-ஒரு சதவீதம். மாநில அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வாயிலாக சமூகத்தின் பின் தங்கிய மற்றும் பட்டியலின பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் முழு பலன்களையும் பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு மாணவர்கள் யாருக்கும், இடங்கள் செல்லவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதனால், ‘நீட்’ அறிமுகப்படுத்தப்பட்ட பின், சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்ற வாதம் முற்றிலும் தவறு. தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல்முறையாக எட்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன.

ஆனால், ‘நீட்’ தேர்வினால் நடக்கும் சமூகநீதி மற்றும் சம வாய்ப்புக்களை மக்களிடம் சொல்லாமல், திராவிட கட்சிகள் மற்றும் இங்குள்ள அமைப்புகள் நாடகமாடி வருகின்றன. இவற்றை புறம்தள்ளிவிட்டு, ‘நீட்’ தேர்வினால் தமிழக மாணவர்களின் நலன் என்ன என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 மதிப்பெண் வைத்து, மருத்துவ சேர்க்கை செய்யும் நடைமுறை, 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. அதில், மொத்தமாக அந்த காலக்கட்டம் முழுவதும் மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 213 பேர் மட்டுமே. அதாவது மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆண்டு சராசரி, 19 பேர் தான். அது மருத்துவ படிப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 0.7 சதவீதம்.

* முன்பெல்லாம் மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களை முழுமையாக கற்று கொடுக்காமல், ‘ப்ளூ பிரிண்ட்’ மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றனர். ஆனால், நீட் தேர்வு வந்த பின் நம் மாணவர்கள் அதற்கு தயாராக துவங்கிவிட்டனர். அரசும் அதற்கான பயிற்சிகளை அளிக்கிறது.

* ‘நீட்’ தேர்வு வந்த பின், தமிழக மாணவர்கள் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெற்று, தேர்ச்சி பெறுகின்றனர். 2020ம் ஆண்டு நடந்த தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், 56.44 சதவீதம். ஆனால், தமிழக சதவீதம், 57.44. கடந்த, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஒன்பது சதவீதம் உயர்ந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/feed/ 2
பிதாகரஸ் தேற்றத்தை முதலில் கண்டுபிடித்தது தமிழர்களா? https://vskdtn.org/2021/07/01/pythagoras-theorem-founder/ https://vskdtn.org/2021/07/01/pythagoras-theorem-founder/#comments Thu, 01 Jul 2021 06:17:00 +0000 https://vskdtn.org/?p=7262 கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா. இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், “என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?” என்றார். “ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!” என்றாள்.

இரத்தினம் தாத்தா: “இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் “பிதாகரஸ் தேற்றம்” என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா”

அமிர்தா: “சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா”

இரத்தினம் தாத்தா: “சொல்றேன் கேள், இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே”
– போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

அமிர்தா: “தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா” என்றாள்.
——————————–
இது வெறும் கதைi அல்ல.
நிரூபணம்:
அ) நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5

ஆ) நீளம் = 8m, உயரம் = 6m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் =
=√6^2+ 8^2=√36+64=10
போதையனார் கோட்பாடு:
கர்ணம்
=(8-(8÷8))+(6÷2)=10
வாழ்க தமிழ்

800 வருட அன்னிய ஆட்சிகள், இன்று வரைமறைத்த உண்மைகள்.

]]>
https://vskdtn.org/2021/07/01/pythagoras-theorem-founder/feed/ 2
நீட் தேர்வின் சட்ட வரலாறு… https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/ https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/#comments Thu, 01 Jul 2021 05:50:15 +0000 https://vskdtn.org/?p=7250 ஆக்கம்: ஸ்ரீநிவாச ராகவன் S
வழக்குரைஞர்
மதுரை

(கேள்வி பதில் வடிவில்)

நீட் தேர்வு எப்படி வந்தது?

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான சேர்க்கை விதிகளில் Medical Council of India (UPA/ காங்கிரஸ் அரசு காலத்தில்) ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது தான் நீட் (NEET) என்ற வகை நுழைவுத் தேர்வு.
(National Eligibility and Entrance Test)

யாருக்கெல்லாம் நீட் தேர்வு உண்டு?

2018 வரை பாராளுமன்றத்தின் தனிப்பட்ட சட்டத்தால் தனியாக அமைக்கப்பட்ட AIIMS மற்றும் JIPMER ஆகிய சில மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற எல்லா அரசு, தனியார், நிகர்நிலை பல்கலை, மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம். மேற்படி எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய கல்லூரிகளும் ஆரம்பம் முதலே தனியான நுழைவுத் தேர்வுகள் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வை விடக் கடினமானவை என்பது வேறு விஷயம்.

நீட் தேர்வை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதா?

ஆம். தமிழ்நாட்டில் Vellore ல் உள்ள CMC என்ற கிறித்தவ மருத்துவக் கல்லூரி தனக்கென்று தனி மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தது. அக்கல்லூரி மேற்கண்ட புதிய நீட் தேர்வு விதிகளை ஆட்சேபித்து ரிட் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதே மாதிரி நாடு முழுவதிலும் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தன்னிடம் மாற்றிக் கொண்டு அனைத்து வழக்குகளையும் கூட்டாக விசாரித்தது.

நீட் தேர்வை உச்சநீதி மன்றம் முதலில் ரத்து செய்ததா?

ஆம். இரு தரப்பிலும் வாதப் பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் அனுமதித்து நீட் தேர்வு விதிகள் செல்லாது என தீர்ப்பளித்தது.

பிறகு எப்படி திரும்ப நீட் தேர்வு வந்தது?

அதன் பின்பு அந்தத் தீர்ப்பில் பல முக்கியமான பிரச்சினைகளும், முன் தீர்ப்புக்களும், சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி Medical Council of India (UPA/ Congress அரசு காலத்தில்) ஒரு Review Petition- ஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்விற்கு இடமுண்டு. அந்த சீராய்வு மனு பிற்பாடு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பேரமர்வுக்கு( Larger Bench) மாற்றப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அந்த பேரமர்வு அதற்கு முந்தைய நீட் தேர்விற்கு எதிரான உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து விட்டது. ஆகையால் நீட்-டிற்கு தடையில்லாமல் போனது. நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனுக்கள் எல்லாம் மீண்டும் restore செய்யப்பட்டு இன்னும் அவை யாவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதன் விளைவாக நீட் தேர்வுக்கான சட்ட விதிகள் restore ஆகி தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. அந்த நீட் தேர்வுக்கான புதிய சட்ட விதிகளை உச்ச நீதிமன்றம் ஸ்டே செய்யவில்லை.

அந்தச் சீராய்வு மனுவை யார் தாக்கல் செய்தார்கள்?

நீட்-டிற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி (மன்மோகன் சிங் / காங். தலைமையிலான UPA வின் மத்திய அரசு பதவியில் இருக்கும் போது) Medical Council of India அந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட பேரமர்வு , நீட் தேர்விற்கு எதிரான முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. எனவே நீட் தேர்வு நடத்த தற்போது தடை ஏதும் இல்லை.

தான் பிறப்பித்த தீர்ப்பைத் தானே சீராய்வு செய்து ஒரு நீதிபதி செயல்படலாமா?

சட்டத்தில் இதற்கு தடையில்லை. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் தான் எழுதிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சீராய்வு செய்த வரலாறு உண்டு. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் தான் பரித்துரைத்து அமைக்கப்பட்ட பேரமர்வில் தானே அமர்ந்து தீர்ப்பு சொன்னது உண்டு. இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B சட்டப் பிரிவின் கீழான அர்ஜுன் பண்டிட் ராவ் வழக்கின் பேரமர்வில் இது கடந்த வருடம் நடந்தது. நீட் வழக்கின் சீராய்வில் மட்டும் இது நடந்ததாகச் சொல்வது சரியல்ல.

நீட் எப்படி நடைமுறைக்கு வந்தது?

உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுவை அனுமதித்ததால் மட்டும் நடுவண் அரசு நீட் தேர்வை உடனே நடைமுறைப் படுத்தவில்லை. ‘சங்கல்ப் டிரஸ்ட்’ என்ற ஒரு அமைப்பு தொடுத்த பொது நல வழக்கில் உச்ச நீதி மன்றம் இனிமேல் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீட் தேர்வுக்கான விதிகள் எந்தச் சட்டத்தில் உள்ளன?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில் 10-D என்ற புதிய சட்டப் பிரிவை 2016-இல் முதலில் அவசர சட்டத்தின் மூலமும் , பின்னர் நிரந்தர சட்டமாகவும் நிறை வேற்றியது. நீட் தேர்வுகள் தற்போது மேற்சொன்ன புதிய /திருத்தப்பட்ட சட்டப் பிரிவு 10-D-யின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.

இந்த விஷயத்தில் தற்போதைய நடுவண் அரசு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தது?

காங். அரசின் திட்டமான நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவக் கல்லூரி அனுமதி விதிகளை பாஜக அரசும் ஏற்றுக் கொண்டது. தில்லியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நீட் தேர்வை ஆதரித்தது. உண்மையில் காங். மற்றும் பாஜக அரசுகளை விட நீட் தேர்வை இந்த அளவிற்கு சீராக முன்னெடுத்துச் சென்றது உச்ச நீதிமன்றம் தான். நடுவண் அரசு நீட் தேர்வைப் பொறுத்து வேறு எதுவும் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவும் இல்லை.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்ததா?

தற்காலிக Exemption கோரி 2016ல் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 254ன் படி அதற்கு மத்திய அரசும் சம்மதம் தந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே அதை அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாகச் சொல்லி விட்டது. திரும்பவும் 2017ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒரு வருடம் மட்டும் exemption கோரி அதே சட்டப் பிரிவின் கீழ் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது. அதனால் முதலில் அதற்கு சரியென்று சொன்ன பாஜக /மத்திய அரசும் கடைசி நேரத்தில் சம்மதம் தராமல் கைகளை விரித்து விட்டது. ஒரு வேளை அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தாலும் அதற்கு நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தாலும் அது 2017ம் வருடத்திற்கு மட்டுமே தரப்பட்டிருக்கும். கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை stay செய்திருக்கவும் அல்லது அது சட்டமாக நிறை வேற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்திருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன.

முதுகலை மருத்துவப் படிப்புக்கும் நீட் அவசியமா?

ஆம். சொல்லப் போனால் முதுகலைப் படிப்புக்கு நீட் தேர்வு இளங்கலைக்கு முன்பே தமிழகத்தில் வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு முன்பாக இருந்த நடைமுறை என்ன?

ஒருவர் இளங்கலை மருத்துவம் படித்து முடித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சிறப்பு மதிப்பெண் ( சீனியாரிட்டி மதிப்பெண்) தரப்படும். அவர் அரசுத் துறையில் வேலை பார்த்தாலும் சரி அல்லது தனியாரில் வேலை பார்த்தாலும் சரி, அந்த மதிப்பெண் அவருக்கு உண்டு. அதிகபட்சம் பத்து மதிப்பெண்கள் மட்டுமே தரப்படும். அவர் அரசு மருத்துவத்துறையில் பணிக்குச் சேர்ந்தால் (அது ஆரம்ப சுகாதார நிலையமோ, அரசு கல்லூரியோ, மருத்துவமனையோ) அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்த மருத்துவர்களுக்கு இந்த சீனியாரிட்டி மதிப்பெண்ணுடன் சேர்த்து வருடத்திற்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் கிடைக்கும். ஆக, ஒரு மருத்துவர் பணியில் சேர்ந்தால் வருடத்திற்கு இரண்டு மதிப்பெண் ( ஒரு சர்வீஸ் மதிப்பெண் + ஒரு சீனியாரிட்டி மதிப்பெண்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான்.

ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும், மலைவாழ் பிரதேசங்களிலும் பணி புரியும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதலாக இரண்டு சர்வீஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். ஆக, இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று மதிப்பெண்கள் ( இரண்டு சர்வீஸ் மார்க் + ஒரு சீனியாரிட்டி மார்க்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான். தமிழ்நாடு மருத்துவ நுழைவுத் தேர்வு முதுகலை படிப்புக்கு 90 மதிப்பெண்களுக்கு நடக்கும். அதில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்ணோடு இந்த சீனியாரிட்டி + சர்வீஸ் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு 100 க்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியாகும் .

Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினர்.

இளங்கலை மருத்துவம் முடித்து மூன்று வருடங்களான ஒருவர்
ஒருவர் 90க்கு 60 மதிப்பெண்கள் எடுக்கிறார் என்றால் அவர் அரசு வேலையில் இல்லை என்றால் அந்த மூன்று வருடங்களுக்கு சீனியாரிட்டி மதிப்பெண் மூன்று மார்க் சேர்த்து 100 க்கு 63 மதிப்பெண்கள் வாங்குவார். ஆனால் அவர் அரசு வேலையில் இருந்தால் மூன்று வருடங்களுக்கு மூன்று சர்வீஸ் மார்க் + மூன்று சீனியாரிட்டி மார்க் சேர்த்து மொத்தம் 66 மதிப்பெண்கள் வாங்குவார்.

இதே அவர் ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மலை வாழ் பிரதேசங்களில் வேலை செய்திருந்தால், மூன்று வருடங்களுக்கு ஆறு சர்வீஸ் மதிப்பெண் + மூன்று சீனியாரிட்டி மதிப்பெண் என 69 மதிப்பெண்கள் மொத்தம் வாங்குவார். தமிழகத்திற்கான 69 சதவிகித இட ஒதுக்கீட்டு அடிப்படையில் முதுகலை இடங்களுக்கு அனுமதி நடத்தப்பட்டு வந்தது. அரசுப் பணியின் மூலம் முதுகலை மருத்துவம் படித்தவர்கள் தாங்கள் பணிக்காலம் முடியும் வரை அரசுப் பணியில் இருப்பர்.

(மேற்சொன்ன தகவல்களைத் தந்த : Farook Abdulla Dr. அவர்களுக்கு நன்றி.)
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ முதுகலை சேர்க்கை முறை அமலுக்கு வந்த பிறகு முதுகலை அனுமதியில் இதற்கெல்லாம் இடமின்றிப் போய்விட்டது.

இதற்கென வேறு விதிகள் உண்டா?

Medical council of India ஒரு இன்சென்டிவ் முறையை விதித்துள்ளது. அதற்கு முரணான தமிழக அரசின் அனைத்து ஒதுக்கீட்டு ஆணைகளையும் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. 2017ம் வருடத் தீர்ப்பின்படி in-house doctors களுக்கான ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதி மன்றம். நீட் தேர்வு மற்றும் MCI விதிகளிக்கு எதிரான எந்த ஒரு புதிய நடைமுறையையும் எந்த மாநிலமும் இனிமேல் பின்பற்ற முடியாது என்பதே அத்தீர்ப்புகளின் மொத்த சாராம்சம்.

ஆந்திராவில் நீட் தேர்வு இல்லை என்கிறார்களே இது உண்மையா?

தவறு. இதற்கு முன்பு அகில இந்திய கோட்டா என்று 15% இளங்கலை இடங்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் (minority and management college seats தவிர்த்து) ஒதுக்கப்பட்டபோது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதில் சேர விருப்பம் கோரப்பட்டது. அப்போது ஆந்திரமும் கஷ்மீரும் அந்த விருப்பத் தேர்வை வேண்டாம் என முடிவெடுத்தன. அந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் 15% All India Quota சேர்க்கை இல்லை. அதனால் அந்த மாநில மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் அதே அகில இந்திய கோட்டா சீட்ஸ்/ அனுமதி கிடையாது. ஆனால் நீட் முறையில் மட்டுமே அட்மிஷன் என்று சட்டம் வந்த பிறகு ஆந்திரா, தெலங்கானா, கஷ்மீர் உட்பட நாடெங்கிலும் உள்ள Minority, Non Minority, Management Seats and Govt. seats in Private Colleges, NRI quota seats என்று எல்லா மருத்துவப் படிப்புக்கான இளங் கலை மற்றும் முதுகலை சீட்களும் நீட் தேர்வு மூலமாக மட்டுமே என்று அனுமதி என்று ஆகி விட்டது.

எந்த ஒரு மாநிலத்திற்கும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து முழு விலக்கு தரப்பட்டடுள்ளதா?

தற்காலிக விலக்கு மட்டும் தரப் பட்டது. அதுவும் 2017 ஆண்டோடு சரி். இப்போது யாருக்கும் எந்த விதமான தற்காலிக அல்லது முழு விலக்கும் கிடையாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கையையே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு இல்லாமல் தேர்ந்தெடுத்த காரணத்தால் கடந்த வருடம் ரத்து செய்துவிட்டது.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் நல்ல உடல் நிலையில் முதல்வர் நாற்காலியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் இல்லை என்பது சரியா?

அப்படி இல்லை. அவர் நீட் தேர்வை முழு மூச்சாக எதிர்த்தார் என்பது உண்மையே. ஆனால் ‘சங்கல்ப் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டால் தான் நீட் தேர்வு இந்த அளவிற்கு நாடெங்கும் நடை முறைக்கு வந்தது. ஜெ. முதல்வராக இருக்கும் போதே முதுகலைக்கும் அகில இந்திய சீட்டுக்கும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு வந்து விட்டது. ஜெ. இன்று ஜெ. தமிழக முதல்வராக இருந்திருந்தாலும் தற்போது இருந்த நிலைதான் இருந்திருக்கும். ஏன் என்றல் அவரது நிலைப் பாட்டினை மத்திய அரசு ஏற்றாலும் உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை. ஒரு வருடத்திற்கான விலக்கு மட்டுமே அதிமுக அரசால் பெற முடிந்தது. சென்ற வருடம் அதையும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசின் கைகளை விட்டு உச்ச நீதி மன்றத்தின் கைகளுக்கு நீட் விதிகள் சென்று விட்ட சூழ்நிலையில் ஜெ. உட்பட எந்த ஒரு அரசியல் தலைவராலும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தாமல் மாநில அரசின் சட்டத்தை வைத்து மட்டும் நீட் தேர்வை தவிர்த்திருக்க முடியாது என்று கருதுகிறேன்.

(மேலதிக விவரங்களுக்கு; https://www.quora.com/Which-Private-Colleges-come-under-neet )

தற்போதைய திமுக அரசால் நீட் நழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியுமா?முடியாது.

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு படிக்க முடியாதா?

இப்போதைய சூழ்நிலையில் முடியாது.

AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களுக்கு நீட் ஏன் பொருந்தவில்லை?

ஏன் என்றால் அவை Indian Medical councilன் அதிகாரத்திற்குள் வராத மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் வரும் சிறப்புச் சட்டங்களின் கீழ் நடத்தப்படுபவை.
அந்த நிறுவனங்கள் தொடங்கிய காலம் முதலே தனியான நுழைவுத் தேர்வு மூலமாகத்தான் மாணவர்களை அனுமதித்து வருகின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வுகளை விடக் கஷ்டமானவை. மற்ற மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள் வரும் என்பதால் அவற்றுக்கு நீட் தேர்வு கட்டாயம்.

ஆனால் 2019ம் வருடம் முதல் பாஜக தலைமையிலான நடுவண் அரசு AIIMS மற்றும் JIPMER ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்துவிட்டது

ரஷ்யா, சீனா போன்ற அயல் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு அவசியமா?

2018ம் வருடத்திலிருந்து அதற்கும் நீட் கட்டாயமே.

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோ, யுனானி என்ற அலோபதி அல்லாத மருத்துவப் படிப்புக்கும் நீட் கட்டாயமா?

ஆம், 2018ம் வருடத்திலிருந்து அவசியம்.

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இறுதியாண்டுக் கல்வி முடித்தவுடன் இங்கே மருத்துவராக முடியுமா?

முடியும். ஆனால் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் ப்ராக்டிஸ் செய்ய முடியாது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நீட் தேர்வை நாடெங்கிலும் ரத்து செய்ய வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள் உண்டு.

1. நீதிமன்றம் மூலமாக
2. பாராளுமன்றம் மூலமாக.

1. நீதிமன்றம் மூலமாக.

நீட் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. அதற்கான ஐந்து நீதிபதிகள் கொண்ட பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு ஏகமனதாகவோ அல்லது பெரும்பான்மை (3 out of 5) நீதிபதிகளோ நீட் தேர்வுக்கான Medical Council சட்டத்தின் 10-D பிரிவு செல்லாது என அறிவித்தால் மருத்துவ மாணவச் சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் இருக்காது.

அவ்வாறான தீர்ப்பு வர வாய்ப்பு உண்டா?

நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

2. பாராளுமன்றம் மூலமாக:

ஒரு வேளை நடுவண் அரசில் ஆளுங்கட்சியாக உள்ள ஏதோ ஒரு அரசியல் கட்சி நீட் தேர்வு நமது நாட்டுக்குத் தேவையில்லை என்று கருதினால் பாராளுமன்றத்தில் அதற்கான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை உறுப்பினர்கள் அந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து ஓட்டளித்தால் மெடிக்கல் கவுன்சில் சட்டப் பிரிவு 10-D மற்றும் நீட் தேர்வுக்கான இதர சட்டப் பிரிவுகளை repeal செய்யமுடியும். Indian Medical Councilஐயும் மத்தியப் பட்டியலில் இருந்து மாற்றியாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நீட் தேர்வுக்கு வழி இருக்காது.

அப்படிப்பட்ட நீட் தேர்வு ஒழிப்புச் சட்டம் இறுதியானதா?

இல்லை. ஏன் என்றால் அவ்வாறான ஒரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாராவது வழக்குத் தாக்கல் செய்தால் இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு அந்த நீட் தேர்வு ஒழிப்புச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உயர்/உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.

பாராளுமன்ற நடவடிக்கை மூலம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது நீட் தேர்வை ஒழிக்குமா?

தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு அகில இந்தியக் கட்சியும் அதைச் செய்யாது என்பது என் அனுமானம்.

அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டுமாவது நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க முடியுமா?

அது சாத்தியம்தான். எப்படி என்றால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு பொருந்தாது என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அதற்கு நடுவண் அரசின் சம்மதம் கோரி அதற்கு நடுவண் அரசு ஒப்புதல் அளித்து இந்திய குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்தால் அச் சட்டம் அமலுக்கு வந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்கு மட்டும் பொருந்தாது.

அப்படிப்பட்ட முயற்சி எப்போதாவது எடுக்கப்பட்டதா?

ஆம். செல்வி ஜெ. அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட சட்ட வரைவு ஒன்றை இயற்றி மத்திய அரசின் சம்மதத்திற்காக அனுப்பியது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவிட்டது.

ஒரு வேளை நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தால் என்ன ஆகும்?

நீட் தேர்வு என்பது தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% All India Quota seats for MBBS மற்றும் 50 % All India Quota seats in PG seats மற்றும் புதிய விதிகளின் படி நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் UG and PG இடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற இடங்களை தமிழகம் தன் விதிகளின் படி நீட் தேர்வு இல்லாமல் நிரப்பிக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட மாநிலச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா?

முடியும். ஏன் என்றால் எந்தவொரு சட்டமும் நீதிமன்றத்தின் Judicial Review-க்கு உட்பட்டதே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அச்சட்டம் சேர்க்கப் பட்டால் கூட அச்சட்டத்தை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க முடியும்.

கல்வி என்ற பொருளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் concurrent list என்ற மத்திய , மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலங்களின் தனிப் பட்டியலான State Listக்கு இனிமேல் மாற்ற வாய்ப்பு உண்டா?

அதுவும் சட்டப்படி சாத்தியம் தான்.
ஆனால் தற்போதைய சூழலில் பல காரணங்களுக்காக அது நடக்காது என நம்புகிறேன். கல்வி என்ற பொருள் மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். அதற்கு நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (ஆளுங்கட்சியாக யார் இருப்பினும்) அறுதிப் பெரும்பான்மை பலம் ( மூன்றில் இரண்டு பங்கு) கட்டாயம். மேலும் அந்த மசோதாவை நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதி மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளாவது சட்டமாக இயற்றியாக வேண்டும்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது இதைச் செய்யுமா?

தற்போதைக்கு அது சாத்தியம் என்று எனக்குத் தோன்ற வில்லை. காலம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

நடுவண் அரசு எப்போது கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது?

1976ல் இந்திரா காந்தி தலைமையிலான காங். அரசு 42வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக அதைச் செய்தது. அது இன்று வரை தொடர்கிறது. அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு அதற்கு முன் இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட பல அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற்றாலும் இந்த பட்டியல் மாற்றத்தை திரும்பப் பெறவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசும் அதைச் செய்ய முன்வரவில்லை.

ஏன் செய்யவில்லை?

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் நடுவண் அரசால் அகில இந்திய அளவில் ஒரு பல்கலைக் கழகத்தையோ, ஆராய்ச்சி நிறுவனத்தையோ, கல்லூரியையோ தனியான சட்டமின்றி நிறுவி திறம்பட நடத்த முடியாது. நாடு தழுவிய அளவில் கல்வி நிலையங்களை நடுவண் அரசு தரமாக நடத்தி வருவது எளிதில் சாத்தியப்படாது. எனவே கல்வி என்பது மத்தியப் பட்டியலில் இல்லாது பொதுப் பட்டியலில் இருப்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று கருத இயலவில்லை.
தவிர Indian Medical Council -ம் மத்தியப் பட்டியலில் இருப்பதால் மருத்துவக் கல்வி முழுமையாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வர இயலாது.

மாநிலச் சட்டத்திற்கு நடுவண் அரசு சம்மதம் தர மறுப்பது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது தானே?

இல்லை. இந்தியா ஒரு quasi federal அரசமைப்பைக் கொண்டது.
UK போல unitary ம் அல்ல. USA போல federalம் அல்ல. எனவே மாநில அரசுகளின் சட்டம் அனைத்தையும் நடுவண் அரசு கண்டிப்பாக அங்கீகரித்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. இதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவு விளக்குகிறது. பொதுவாக மாநில அரசின் பல சட்டங்களை நடுவண் அரசு நிறைவேற்ற மறுப்பதில்லை. இந்து சுயமரியாதைத் திருமணம், இந்துப் பெண்களுக்கு பூர்விகச் சொத்தில் சம உரிமை, ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை போன்ற பல விஷயங்களில் இதற்கு முன் தமிழகச் சட்டங்களுக்கு நடுவண் அரசு சம்மதம் கொடுத்திருக்கிறது.

அவ்வாறானால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிப்பதில் நடுவண் அரசிற்கு என்ன தயக்கம்?

மருத்துவக் கல்வியை நாடு முழுவதும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற காங். அரசின் கொள்கையை தற்போதைய பாஜக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றால் அது நாடு முழுவதும் அமலாக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு.
எனவே ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதிலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது என்பது அவர்களது கொள்கைக்கு ஏற்றது அல்ல என்பது அவர்களின் எண்ணம். மேலும் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடை முறைப்படுத்துவதில் காட்டும் வேகமும் மற்றொரு காரணம்.

நீதியரசர் A. K. Rajan தலைமையிலான நிபுணர் குழுவை எதற்காக தற்போதைய திமுக அரசு அமைத்துள்ளது? அந்த குழுவின் அறிக்கையை வைத்து தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா?

நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக அக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் நீட் தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்ட சபையில் தீர்மானம் இயற்றவும், விலக்கு அளித்து சட்டம் இயற்றி நடுவண் அரசின் சம்மதத்திற்கு அனுப்பவும் மட்டுமே அந்த அறிக்கை உதவும். அதை ஒரு வேளை நடுவண் அரசு என்றால் கூட உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ ஏற்காது.

பின் எதற்காக அந்த அறிக்கை, குழு எல்லாம்?

மன்னிக்கவும். நான் அரசியல் பேச விரும்பவில்லை.

இப்பதிவின் நோக்கம் என்ன?

நீட் நுழைவுத் தேர்வுக்குப் பின்னால் உள்ள சட்ட வரலாற்றைச் சொல்வது மட்டுமே.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தற்போதைக்கு யார் கையில் உள்ளது?

உச்சநீதிமன்றத்தின் கைகளில்
—–
Case laws Referred to: (2014) Supreme Court Cases Page 305 And (2016) 4 Supreme Court Cases Page 342

தொகுப்பு; இளம்குமார் சம்பத்
vaisambath@gmail.com

 

]]>
https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/feed/ 1
நீட் தேர்வு பற்றி உண்மை நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. https://vskdtn.org/2021/06/30/neet-thervu-parri-unmai-nilai/ https://vskdtn.org/2021/06/30/neet-thervu-parri-unmai-nilai/#respond Wed, 30 Jun 2021 05:44:26 +0000 https://vskdtn.org/?p=7172 நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??  ஒரு அலசல்.



 

1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -2925.

3. இந்த2925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.

4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து Medical council of India (MCI) நீட் தேர்விற்க்கான syllabus ஐ வடிவமைத்துள்ளார்கள்.

5. NCERT பாடப்புத்தகங்களை CBSE அப்படியே எடுத்துக்கொண்டுள்ளார்கள். ஆந்திரா போன்ற சிலமாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்தார்கள்.

6. எனவே நீட் தேர்வு பாடத்திட்டம் NCERT படத்திட்டத்திலிருந்து MCI ஆல் எடுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதில்லை.

7. நீட் தேர்வில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அறிவாற்றல் திறனின் (Cognitive skills) முதல் மூன்று திறன்களை (Remembering, understanding and Application) சோதிக்கும் விதத்தில் இருக்கும்.

8. இந்த மூன்று திறன்கள் பள்ளிக்கல்வியில் வளர்ந்தால்தான் மீதமுள்ள திறன்களை (Analysis, synthesis and creativity) கல்லூரி கல்வியில் வளர்க்க முடியும் இந்த அறிவாற்றல் திறனின் மேல்திறன் (creativity) புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனாகும்.

9. தமிழ்நாட்டில் Blue print எனப்படும் எந்த கேள்விக்கு எந்த பாடத்தில் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற தேர்வுமுறை 2017 வரை அமலில் இருந்தது. இந்த தேர்வுமுறை மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்காமல் மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது. இது கிட்டத்தட்ட தேர்விற்கு முன்னரே Question paper ஐ out செய்வதற்கு ஒப்பானதாகும். இந்த தேர்வுமுறையில் மாணவர்கள் சில பாடங்களை படிக்காமலேயே முழுமதிப்பெண் எடுக்க முடியும். இதுகூட 12ம் வகுப்பு பாடம் மட்டும்தான். 11ம் வகுப்பு பாடங்கள் 99% பள்ளிகளில் நடத்தப்படவே இல்லை.

10. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில்தான் ஆசிரியர்கள் பாடத்திட்டதை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

11. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2017 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டிலிருந்து Buleprint தேர்வுமுறை ஒழிக்கப்பட்டது. கேள்விகள் சிறிது அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதத்தில் கேட்கப்பட்டன. 2020ம் ஆண்டில் நம் மாணவர்களின் 12ம் வகுப்பு தேர்ச்சி 93%. ஆனால் அந்த 93% ல் 50% மாணவர்கள் வெறும் தேர்ச்சி மதிப்பெண்(pass mark) மற்றும்தான் பெற்றுள்ளார்கள்.

12. நீட் தேர்வானது 2013ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தடைகளை கடந்து 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட் மூலமாக மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று ஒரு ஆண்டிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதன்முலம் இடஒதுக்கீடோ அல்லது சொந்த மாநிலத்தில் உள்ள எந்த ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள் அவர்களின் மாநில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது தமிழத்தின் அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவாகியது. இது நீட் தேர்வு வருவதற்கு முன்னிருந்த அதே நிலையாகும்.

இப்பொழுது.. சில கேள்விகள் :

1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??

2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???

3. வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்துமட்டும் நடப்பதன் காரணம் என்ன??

4. NCERT பாடத்திட்டத்தை குறைத்து.. தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???

5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை?? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை???

6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை??

7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்??? 11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்??? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை?? இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்???

8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா??? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா??

9. அனிதாவின் மரணம் என்னை மிகவும் பதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்க்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.
(i) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை
(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்
(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை
(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு???
(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்???
11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா?? அரசாங்கம் காரணமா??
(vi) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு???
(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு??
நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு??
அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே?? அதை செய்யாதது யார் தவறு???
(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???

10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்தமாநில மாணவர்கள் சேரலாம்.

12. இங்கு சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.
a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050
b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945
(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் FC (Forward caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)
d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)
e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)
f) சென்ற வருடம் தமிழ்நாட்டில் சமூக வாரியாக பெற்ற MBBS இடங்கள்
(i) FC-136
(ii) BC-1594
(iii) MBC-720
(iv) SC/ST-600
நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)

13. அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது. நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா??? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்தது பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா??? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா???

14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன??? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா??? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா??? இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா??? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா???
முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்.

1 6. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???

17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா???
உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டுவரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா??
நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா??
கல்வியின் தரம் சம்பந்தமாக இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா??? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா?? தயவுசெய்து யோசியுங்கள்!

18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும் முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்தத் தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்தப் பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிகச் சிறிய தவறுகள் இருக்கலாம்.
இந்தப் பதிவு உங்களுக்கு நியாயமாகத் தெரிந்தால் மக்கள் பலரும் அறிந்துகொள்ளுமாறு அனைவருக்கும் தயவுசெய்து பகிருங்கள்.

Dr. T. பெரியசாமி., M. Tech., Ph. D(IIT Madras)

]]>
https://vskdtn.org/2021/06/30/neet-thervu-parri-unmai-nilai/feed/ 0
மாணவர்கள் இனி கல்வி கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க தேவை இல்லை. https://vskdtn.org/2021/06/10/students-education-loan-scheme/ https://vskdtn.org/2021/06/10/students-education-loan-scheme/#comments Thu, 10 Jun 2021 05:28:05 +0000 https://vskdtn.org/?p=6421 பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற மாணவர்கள் வாங்கி வாசலில் நெடுநேரம் காத்திருக்கும் சூழ்நிலையை நாம் பார்த்திருப்போம். இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்.

கல்விக்கடனுக்காகவே மத்திய அரசு ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்” என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/06/10/students-education-loan-scheme/feed/ 2