Neet – VSKDTN News https://vskdtn.org Thu, 31 Mar 2022 13:36:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஜூலை 17ல் நீட் தேர்வு https://vskdtn.org/2022/03/31/need-selection-on-july-17/ https://vskdtn.org/2022/03/31/need-selection-on-july-17/#respond Thu, 31 Mar 2022 13:36:25 +0000 https://vskdtn.org/?p=13686 பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு இந்திய இளவில் நடைபெறும் நுழைத்தேர்வு நீட். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்.,2) முதல் மே 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

]]>
https://vskdtn.org/2022/03/31/need-selection-on-july-17/feed/ 0
முதுநிலை மருத்துவ படிப்பு ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைப்பு: மத்திய அரசு https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/ https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/#respond Sun, 13 Mar 2022 10:15:00 +0000 https://vskdtn.org/?p=12996 நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2022 – 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது,அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15ம் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்ககம், தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம்:அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/feed/ 0
மாணவர் மேம்பட ‘நீட்’ அவசியம் https://vskdtn.org/2022/03/07/student-need/ https://vskdtn.org/2022/03/07/student-need/#respond Mon, 07 Mar 2022 06:36:02 +0000 https://vskdtn.org/?p=12728 மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட, ‘நீட்’ தேர்வு அவசியம்.

அனைத்து வகையான படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உண்டு
அதன்படி மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட நீட் தேர்வு அவசியம்.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் திறப்பதால் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் தெருவித்தார் .

]]>
https://vskdtn.org/2022/03/07/student-need/feed/ 0
நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை:தமிழக ஆளுநர் கருத்து https://vskdtn.org/2022/02/08/neet-high-commision/ https://vskdtn.org/2022/02/08/neet-high-commision/#respond Tue, 08 Feb 2022 12:15:50 +0000 https://vskdtn.org/?p=11641 நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகல், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் முன் வைக்கப்பட்டது.
அதில் அவர் நீட் தேர்வு குறித்து தமிழக அரசு அமைத்த உயர்மட்ட குழு சமர்ப்பித்த அறிக்கை ஆதாரம் இல்லாமல் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/02/08/neet-high-commision/feed/ 0
திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள் https://vskdtn.org/2021/11/05/neet/ https://vskdtn.org/2021/11/05/neet/#respond Fri, 05 Nov 2021 12:16:21 +0000 https://vskdtn.org/?p=9128
திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:
 
மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.
 
பொய் 1:
நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.
 
முடிவுகள் சொல்லும் உண்மை:
 
இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள்.
 
பொய் 2:
அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.
 
முடிவுகள் சொல்லும் உண்மை:
 
திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.
 
பொய் 3:
அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.
 
முடிவுகள் சொல்லும் உண்மை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.
பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)
ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.
மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.
 
பொய் 4:
கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.
 
முடிவுகள் சொல்லும் உண்மை:
 
கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய பெண் எம். சங்கவி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.
 
பொய் 5:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமானது.
 
முடிவுகள் சொல்லும் உண்மை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு : 57 216.
இந்த ஆண்டு: 58,922
 
அனைவரும் அறிய வேண்டியது:
 
முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.
 
செய்ய வேண்டியது: 1
 
நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்.
 
2 இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
 
செய்வார்களா?
 
இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?
]]>
https://vskdtn.org/2021/11/05/neet/feed/ 0
பொறியியல் கல்விக்கு நுழைவு தேர்வு வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – கல்வியாளர் பாலகுருசாமி. https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/ https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/#respond Mon, 19 Jul 2021 11:08:11 +0000 https://vskdtn.org/?p=7743 இன்ஜினியரிங் படிப்பின் தரம் குறைந்து விட்டதாலும் பள்ளிகளில் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதாலும் நுழைவு தேர்வை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் 2005ல் 220 இன்ஜி. கல்லுாரிகள் இருந்தன. தற்போது 520க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை முடிக்கின்றனர்.

ஆனால் இன்ஜினியரிங் பட்டம் பெறுவோரில் 80 சதவீதம் பேர் படைப்பாக்க சிந்தனை கள அறிவு வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் போன்றவற்றில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு போன்றவற்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதால் நுழைவு தேர்வு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார் பாலகுருசாமி.

]]>
https://vskdtn.org/2021/07/19/poriyyal-kalvikku-nulavi-thervu/feed/ 0
நீட் தேர்வு ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை – விழிபிதுங்கும் திமுக அரசு. https://vskdtn.org/2021/07/10/neet-exam-with-dmk/ https://vskdtn.org/2021/07/10/neet-exam-with-dmk/#comments Sat, 10 Jul 2021 10:09:12 +0000 https://vskdtn.org/?p=7507 நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உச்சநீதி மன்றம் மூலம் அங்கீகரிக்கப்பட்டள்ளது. அதனால் மாநில அரசால் ரத்து இயலாது என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர் தெரிவித்து உள்ளார்.


தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்தது. இதை எதிர்த்து பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கிற்க்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், குறிபிட்டுள்ளதாவது ‘‘நீட் தேர்வுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உச்சநீதிமன்றத்தால் சட்ட அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயும் குழு அமைக்க, தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போது மாநில அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளதால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் விழி பிதுங்கி நிற்கிறது திமுக அரசு.

]]>
https://vskdtn.org/2021/07/10/neet-exam-with-dmk/feed/ 1
நீட் தேர்வில் சமூகநீதி மற்றும் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது – புள்ளிவிவரங்களுடன் பாஜக பொறுப்பாளர் கனகசபாபதி. https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/ https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/#comments Tue, 06 Jul 2021 12:56:01 +0000 https://vskdtn.org/?p=7400 ‘நீட்’ தேர்வால் சமூகநீதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால், திராவிட கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக நாடகமாடுகின்றன என, புள்ளி விபரங்களுடன், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு, 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் கம்யூ., கட்சிகள், அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்துவிட்டு, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

”நீட் தேர்வு குறித்து சரியாக புரிந்து கொள்ள, தமிழக மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள், இடப்பகிர்வு பற்றிய அடிப்படை விபரங்கள் மற்றும் நீட் தேர்வால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ”இவற்றால், நீட் தேர்வு உண்டாக்கியுள்ள கள மாற்றங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்,” என்கிறார், தமிழக பா.ஜ., மாநில துணை தலைவர் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி.
கனகசபாபதி கூறியதாவது: தமிழக அரசு வெளியிட்டுள்ள, 2020ம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறித்த ஆதாரங்களில் இருந்து, மாநிலத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்கள், 3,650. அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஐ.ஆர்.டி.டி., வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், 619. தமிழக மாணவர்களுக்கான பிரத்யேக இடங்கள், 3,031. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு (7.5 சதவீதம்) 227 இடங்கள் மற்றும் பொது ஒதுக்கீட்டுக்கான இடங்கள், 2,804.

தமிழக அரசு, 2020ம் ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதனால், அரசு இடஒதுக்கீடு (சதவீதத்தில்) பொதுப் பிரிவு-31, பிற்படுத்தப்பட்ட பிரிவு-27, பிற்பட்ட வகுப்பு-முஸ்லிம்கள் -3, மிகவும் பிற்பட்ட பிரிவு-20, பட்டியலின வகுப்பு- 17, பட்டியலின வகுப்பு அருந்ததியர்-3, மலைவாழ் மக்கள்-1 சதவீத இடங்கள்.

இதன்படி கிடைத்த இடங்களின் விகிதாசாரம், பொதுப்பிரிவு-0, பிற்பட்ட பிரிவு-34.4, பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்- 5.3, மிகவும் பிற்பட்ட வகுப்பு-35.2, பட்டியலின வகுப்பு-20.7, பட்டியலின வகுப்பு அருந்ததியர்-3.5, மலைவாழ் மக்கள்-ஒரு சதவீதம். மாநில அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வாயிலாக சமூகத்தின் பின் தங்கிய மற்றும் பட்டியலின பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் முழு பலன்களையும் பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு மாணவர்கள் யாருக்கும், இடங்கள் செல்லவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதனால், ‘நீட்’ அறிமுகப்படுத்தப்பட்ட பின், சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்ற வாதம் முற்றிலும் தவறு. தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல்முறையாக எட்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன.

ஆனால், ‘நீட்’ தேர்வினால் நடக்கும் சமூகநீதி மற்றும் சம வாய்ப்புக்களை மக்களிடம் சொல்லாமல், திராவிட கட்சிகள் மற்றும் இங்குள்ள அமைப்புகள் நாடகமாடி வருகின்றன. இவற்றை புறம்தள்ளிவிட்டு, ‘நீட்’ தேர்வினால் தமிழக மாணவர்களின் நலன் என்ன என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 மதிப்பெண் வைத்து, மருத்துவ சேர்க்கை செய்யும் நடைமுறை, 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. அதில், மொத்தமாக அந்த காலக்கட்டம் முழுவதும் மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 213 பேர் மட்டுமே. அதாவது மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆண்டு சராசரி, 19 பேர் தான். அது மருத்துவ படிப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 0.7 சதவீதம்.

* முன்பெல்லாம் மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களை முழுமையாக கற்று கொடுக்காமல், ‘ப்ளூ பிரிண்ட்’ மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றனர். ஆனால், நீட் தேர்வு வந்த பின் நம் மாணவர்கள் அதற்கு தயாராக துவங்கிவிட்டனர். அரசும் அதற்கான பயிற்சிகளை அளிக்கிறது.

* ‘நீட்’ தேர்வு வந்த பின், தமிழக மாணவர்கள் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெற்று, தேர்ச்சி பெறுகின்றனர். 2020ம் ஆண்டு நடந்த தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், 56.44 சதவீதம். ஆனால், தமிழக சதவீதம், 57.44. கடந்த, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஒன்பது சதவீதம் உயர்ந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/07/06/neet-esam-samukaniithi/feed/ 2
நீட் தேர்வுக்கு எதிராக கமிஷன்; நீதிபதியாய் இருந்தவருக்கு சட்டம் தெரியாதிருக்க முடியுமா? https://vskdtn.org/2021/07/01/neethipathi-irunthavarkku-sattam-theriyathirkka/ https://vskdtn.org/2021/07/01/neethipathi-irunthavarkku-sattam-theriyathirkka/#respond Thu, 01 Jul 2021 06:40:06 +0000 https://vskdtn.org/?p=7270 நீட் என்பதன் அவசியத்தையும், செயல்முறையையும் தீர ஆராய்ந்து, தமிழகம் கேட்ட மூன்று ஆண்டுகள் விதிவிலக்கும் கொடுத்து, பின்னர் நீட் செயல்படுத்தப்பட்டே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..! இனி என்ன செய்ய முடியும் தமிழக அரசால்..? United Nations கோர்ட்டுக்குப் போவார்களா..?

தன்னை ஒரு கமிஷனுக்கு தலைவராக்கும் போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைப் பற்றிக் கவலையே படாமலா ஒரு நீதிபதி அதை ஒப்புக் கொள்வார்..? தான் செய்யப்போவதற்கு சட்ட மரியாதையே கிடையாது என்பது தெரிந்தேவா ஒரு நீதிபதி இறங்குவார்..?

ஒரு செயலுக்கு அர்த்தமே இல்லை; பிரயோசனமே கிடையாது என்றே தெரிந்தேவா ஒரு மாநில அரசு கமிஷன் அமைத்து காசு செலவழிக்கும்..?

கமிஷன் முன் 86000 பேர் வந்து நீட் தேவையில்லை என்று சொல்லியிருப்பதால், நீட்கமிஷன் அமைத்தது சரிதான் என்று சொல்லியிருக்கிறார் மா.சு.

அப்படியானால், நான் கேட்கிறேன்:

1. டாஸ்மாக் அவசியம்தானா என்று ஒரு கமிஷன் வைக்கலாமா..? எல்லா தாய்மார்களும் வந்து வேண்டாம் என்று கதறுவார்கள்..! டாஸ்மாக்கை மூடி விட முடியுமா..?

2. நான் வேலை செய்து வரி கட்டுகிறேன். அதை வேலையே செய்யாமல் காலாட்டிக் கொண்டு சோம்பேறித்தனமாய்க் கிடப்பவர்களுக்கு இலவசமாய் கொடுப்பது சரிதானா என்ற கேள்விக்கு ஒரு கமிஷன் அமைக்கலாமா..? மத்தியவர்க்கமே மொத்தமாய் வந்து குமுறும்..! இலவசத்தை நிறுத்தி விடலாமா..?

3. உலகின் அழகான பீச்சை, தலைவர்களுக்கு சமாதிகள் என ஒரு சுடுகாடாக்குவது சரிதானா என்று ஒரு கமிஷன் வைத்து கருத்து கேட்கலாமா..? பலர் வந்து குமுறுவார்கள்..! சமாதிகளை இடித்து விடலாமா..?

4. கோடிக்கணக்கானோர் நம்பும் இந்து மதத்தை அவமதிப்பவர்களை ஒன்றும் செய்யாதிருக்கும் இந்த டெமாக்ரஸி சரியானதுதானா என்று ஒரு கமிஷன் வைத்து கருத்து கேட்கலாமா..? நிச்சயம் பல கோடி பேர் வந்து பேசுவார்கள்..! உடனே இந்து மதத்தை அவமதிப்பவர்களை சிறையில் அடைக்க முடியுமா..?

கமிஷன் வைத்து அதில் வந்து பேசுபவர்களின் கருத்தை வைத்தே எல்லாம் நடத்த முடியும் என்றால், சட்டம் தேவையில்லை, கோர்ட் தேவையில்லை, பார்லிமெண்ட் தேவையில்லை, ஒரு புண்ணாக்கும் தேவையில்லை..!

இந்த நீட் கமிஷன் அமைத்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்பு அதிகம்..! கமிஷன் நிறுத்தப்படும்..!

தேர்தலில் ஜெயிக்க, நடக்காது என்று தெரிந்தேதான், நீட்டை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் உதார் விட்டார்..!

இந்த அரசியல் ஏமாற்று வேலைகளை நம்பாமல் நீங்கள் நன்றாகப் படியுங்கள் தமிழக மாணவச் செல்வங்களே..! உங்களால் சாதிக்க முடியும்..!

]]>
https://vskdtn.org/2021/07/01/neethipathi-irunthavarkku-sattam-theriyathirkka/feed/ 0
நீட் தேர்வின் சட்ட வரலாறு… https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/ https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/#comments Thu, 01 Jul 2021 05:50:15 +0000 https://vskdtn.org/?p=7250 ஆக்கம்: ஸ்ரீநிவாச ராகவன் S
வழக்குரைஞர்
மதுரை

(கேள்வி பதில் வடிவில்)

நீட் தேர்வு எப்படி வந்தது?

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான சேர்க்கை விதிகளில் Medical Council of India (UPA/ காங்கிரஸ் அரசு காலத்தில்) ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது தான் நீட் (NEET) என்ற வகை நுழைவுத் தேர்வு.
(National Eligibility and Entrance Test)

யாருக்கெல்லாம் நீட் தேர்வு உண்டு?

2018 வரை பாராளுமன்றத்தின் தனிப்பட்ட சட்டத்தால் தனியாக அமைக்கப்பட்ட AIIMS மற்றும் JIPMER ஆகிய சில மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற எல்லா அரசு, தனியார், நிகர்நிலை பல்கலை, மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம். மேற்படி எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய கல்லூரிகளும் ஆரம்பம் முதலே தனியான நுழைவுத் தேர்வுகள் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வை விடக் கடினமானவை என்பது வேறு விஷயம்.

நீட் தேர்வை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதா?

ஆம். தமிழ்நாட்டில் Vellore ல் உள்ள CMC என்ற கிறித்தவ மருத்துவக் கல்லூரி தனக்கென்று தனி மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தது. அக்கல்லூரி மேற்கண்ட புதிய நீட் தேர்வு விதிகளை ஆட்சேபித்து ரிட் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதே மாதிரி நாடு முழுவதிலும் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தன்னிடம் மாற்றிக் கொண்டு அனைத்து வழக்குகளையும் கூட்டாக விசாரித்தது.

நீட் தேர்வை உச்சநீதி மன்றம் முதலில் ரத்து செய்ததா?

ஆம். இரு தரப்பிலும் வாதப் பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் அனுமதித்து நீட் தேர்வு விதிகள் செல்லாது என தீர்ப்பளித்தது.

பிறகு எப்படி திரும்ப நீட் தேர்வு வந்தது?

அதன் பின்பு அந்தத் தீர்ப்பில் பல முக்கியமான பிரச்சினைகளும், முன் தீர்ப்புக்களும், சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி Medical Council of India (UPA/ Congress அரசு காலத்தில்) ஒரு Review Petition- ஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்விற்கு இடமுண்டு. அந்த சீராய்வு மனு பிற்பாடு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பேரமர்வுக்கு( Larger Bench) மாற்றப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அந்த பேரமர்வு அதற்கு முந்தைய நீட் தேர்விற்கு எதிரான உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து விட்டது. ஆகையால் நீட்-டிற்கு தடையில்லாமல் போனது. நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனுக்கள் எல்லாம் மீண்டும் restore செய்யப்பட்டு இன்னும் அவை யாவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதன் விளைவாக நீட் தேர்வுக்கான சட்ட விதிகள் restore ஆகி தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. அந்த நீட் தேர்வுக்கான புதிய சட்ட விதிகளை உச்ச நீதிமன்றம் ஸ்டே செய்யவில்லை.

அந்தச் சீராய்வு மனுவை யார் தாக்கல் செய்தார்கள்?

நீட்-டிற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி (மன்மோகன் சிங் / காங். தலைமையிலான UPA வின் மத்திய அரசு பதவியில் இருக்கும் போது) Medical Council of India அந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட பேரமர்வு , நீட் தேர்விற்கு எதிரான முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. எனவே நீட் தேர்வு நடத்த தற்போது தடை ஏதும் இல்லை.

தான் பிறப்பித்த தீர்ப்பைத் தானே சீராய்வு செய்து ஒரு நீதிபதி செயல்படலாமா?

சட்டத்தில் இதற்கு தடையில்லை. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் தான் எழுதிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சீராய்வு செய்த வரலாறு உண்டு. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் தான் பரித்துரைத்து அமைக்கப்பட்ட பேரமர்வில் தானே அமர்ந்து தீர்ப்பு சொன்னது உண்டு. இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B சட்டப் பிரிவின் கீழான அர்ஜுன் பண்டிட் ராவ் வழக்கின் பேரமர்வில் இது கடந்த வருடம் நடந்தது. நீட் வழக்கின் சீராய்வில் மட்டும் இது நடந்ததாகச் சொல்வது சரியல்ல.

நீட் எப்படி நடைமுறைக்கு வந்தது?

உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுவை அனுமதித்ததால் மட்டும் நடுவண் அரசு நீட் தேர்வை உடனே நடைமுறைப் படுத்தவில்லை. ‘சங்கல்ப் டிரஸ்ட்’ என்ற ஒரு அமைப்பு தொடுத்த பொது நல வழக்கில் உச்ச நீதி மன்றம் இனிமேல் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீட் தேர்வுக்கான விதிகள் எந்தச் சட்டத்தில் உள்ளன?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில் 10-D என்ற புதிய சட்டப் பிரிவை 2016-இல் முதலில் அவசர சட்டத்தின் மூலமும் , பின்னர் நிரந்தர சட்டமாகவும் நிறை வேற்றியது. நீட் தேர்வுகள் தற்போது மேற்சொன்ன புதிய /திருத்தப்பட்ட சட்டப் பிரிவு 10-D-யின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.

இந்த விஷயத்தில் தற்போதைய நடுவண் அரசு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தது?

காங். அரசின் திட்டமான நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவக் கல்லூரி அனுமதி விதிகளை பாஜக அரசும் ஏற்றுக் கொண்டது. தில்லியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நீட் தேர்வை ஆதரித்தது. உண்மையில் காங். மற்றும் பாஜக அரசுகளை விட நீட் தேர்வை இந்த அளவிற்கு சீராக முன்னெடுத்துச் சென்றது உச்ச நீதிமன்றம் தான். நடுவண் அரசு நீட் தேர்வைப் பொறுத்து வேறு எதுவும் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவும் இல்லை.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்ததா?

தற்காலிக Exemption கோரி 2016ல் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 254ன் படி அதற்கு மத்திய அரசும் சம்மதம் தந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே அதை அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாகச் சொல்லி விட்டது. திரும்பவும் 2017ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒரு வருடம் மட்டும் exemption கோரி அதே சட்டப் பிரிவின் கீழ் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது. அதனால் முதலில் அதற்கு சரியென்று சொன்ன பாஜக /மத்திய அரசும் கடைசி நேரத்தில் சம்மதம் தராமல் கைகளை விரித்து விட்டது. ஒரு வேளை அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தாலும் அதற்கு நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தாலும் அது 2017ம் வருடத்திற்கு மட்டுமே தரப்பட்டிருக்கும். கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை stay செய்திருக்கவும் அல்லது அது சட்டமாக நிறை வேற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்திருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன.

முதுகலை மருத்துவப் படிப்புக்கும் நீட் அவசியமா?

ஆம். சொல்லப் போனால் முதுகலைப் படிப்புக்கு நீட் தேர்வு இளங்கலைக்கு முன்பே தமிழகத்தில் வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு முன்பாக இருந்த நடைமுறை என்ன?

ஒருவர் இளங்கலை மருத்துவம் படித்து முடித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சிறப்பு மதிப்பெண் ( சீனியாரிட்டி மதிப்பெண்) தரப்படும். அவர் அரசுத் துறையில் வேலை பார்த்தாலும் சரி அல்லது தனியாரில் வேலை பார்த்தாலும் சரி, அந்த மதிப்பெண் அவருக்கு உண்டு. அதிகபட்சம் பத்து மதிப்பெண்கள் மட்டுமே தரப்படும். அவர் அரசு மருத்துவத்துறையில் பணிக்குச் சேர்ந்தால் (அது ஆரம்ப சுகாதார நிலையமோ, அரசு கல்லூரியோ, மருத்துவமனையோ) அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்த மருத்துவர்களுக்கு இந்த சீனியாரிட்டி மதிப்பெண்ணுடன் சேர்த்து வருடத்திற்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் கிடைக்கும். ஆக, ஒரு மருத்துவர் பணியில் சேர்ந்தால் வருடத்திற்கு இரண்டு மதிப்பெண் ( ஒரு சர்வீஸ் மதிப்பெண் + ஒரு சீனியாரிட்டி மதிப்பெண்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான்.

ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும், மலைவாழ் பிரதேசங்களிலும் பணி புரியும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதலாக இரண்டு சர்வீஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். ஆக, இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று மதிப்பெண்கள் ( இரண்டு சர்வீஸ் மார்க் + ஒரு சீனியாரிட்டி மார்க்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான். தமிழ்நாடு மருத்துவ நுழைவுத் தேர்வு முதுகலை படிப்புக்கு 90 மதிப்பெண்களுக்கு நடக்கும். அதில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்ணோடு இந்த சீனியாரிட்டி + சர்வீஸ் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு 100 க்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியாகும் .

Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினர்.

இளங்கலை மருத்துவம் முடித்து மூன்று வருடங்களான ஒருவர்
ஒருவர் 90க்கு 60 மதிப்பெண்கள் எடுக்கிறார் என்றால் அவர் அரசு வேலையில் இல்லை என்றால் அந்த மூன்று வருடங்களுக்கு சீனியாரிட்டி மதிப்பெண் மூன்று மார்க் சேர்த்து 100 க்கு 63 மதிப்பெண்கள் வாங்குவார். ஆனால் அவர் அரசு வேலையில் இருந்தால் மூன்று வருடங்களுக்கு மூன்று சர்வீஸ் மார்க் + மூன்று சீனியாரிட்டி மார்க் சேர்த்து மொத்தம் 66 மதிப்பெண்கள் வாங்குவார்.

இதே அவர் ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மலை வாழ் பிரதேசங்களில் வேலை செய்திருந்தால், மூன்று வருடங்களுக்கு ஆறு சர்வீஸ் மதிப்பெண் + மூன்று சீனியாரிட்டி மதிப்பெண் என 69 மதிப்பெண்கள் மொத்தம் வாங்குவார். தமிழகத்திற்கான 69 சதவிகித இட ஒதுக்கீட்டு அடிப்படையில் முதுகலை இடங்களுக்கு அனுமதி நடத்தப்பட்டு வந்தது. அரசுப் பணியின் மூலம் முதுகலை மருத்துவம் படித்தவர்கள் தாங்கள் பணிக்காலம் முடியும் வரை அரசுப் பணியில் இருப்பர்.

(மேற்சொன்ன தகவல்களைத் தந்த : Farook Abdulla Dr. அவர்களுக்கு நன்றி.)
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ முதுகலை சேர்க்கை முறை அமலுக்கு வந்த பிறகு முதுகலை அனுமதியில் இதற்கெல்லாம் இடமின்றிப் போய்விட்டது.

இதற்கென வேறு விதிகள் உண்டா?

Medical council of India ஒரு இன்சென்டிவ் முறையை விதித்துள்ளது. அதற்கு முரணான தமிழக அரசின் அனைத்து ஒதுக்கீட்டு ஆணைகளையும் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. 2017ம் வருடத் தீர்ப்பின்படி in-house doctors களுக்கான ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதி மன்றம். நீட் தேர்வு மற்றும் MCI விதிகளிக்கு எதிரான எந்த ஒரு புதிய நடைமுறையையும் எந்த மாநிலமும் இனிமேல் பின்பற்ற முடியாது என்பதே அத்தீர்ப்புகளின் மொத்த சாராம்சம்.

ஆந்திராவில் நீட் தேர்வு இல்லை என்கிறார்களே இது உண்மையா?

தவறு. இதற்கு முன்பு அகில இந்திய கோட்டா என்று 15% இளங்கலை இடங்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் (minority and management college seats தவிர்த்து) ஒதுக்கப்பட்டபோது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதில் சேர விருப்பம் கோரப்பட்டது. அப்போது ஆந்திரமும் கஷ்மீரும் அந்த விருப்பத் தேர்வை வேண்டாம் என முடிவெடுத்தன. அந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் 15% All India Quota சேர்க்கை இல்லை. அதனால் அந்த மாநில மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் அதே அகில இந்திய கோட்டா சீட்ஸ்/ அனுமதி கிடையாது. ஆனால் நீட் முறையில் மட்டுமே அட்மிஷன் என்று சட்டம் வந்த பிறகு ஆந்திரா, தெலங்கானா, கஷ்மீர் உட்பட நாடெங்கிலும் உள்ள Minority, Non Minority, Management Seats and Govt. seats in Private Colleges, NRI quota seats என்று எல்லா மருத்துவப் படிப்புக்கான இளங் கலை மற்றும் முதுகலை சீட்களும் நீட் தேர்வு மூலமாக மட்டுமே என்று அனுமதி என்று ஆகி விட்டது.

எந்த ஒரு மாநிலத்திற்கும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து முழு விலக்கு தரப்பட்டடுள்ளதா?

தற்காலிக விலக்கு மட்டும் தரப் பட்டது. அதுவும் 2017 ஆண்டோடு சரி். இப்போது யாருக்கும் எந்த விதமான தற்காலிக அல்லது முழு விலக்கும் கிடையாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கையையே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு இல்லாமல் தேர்ந்தெடுத்த காரணத்தால் கடந்த வருடம் ரத்து செய்துவிட்டது.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் நல்ல உடல் நிலையில் முதல்வர் நாற்காலியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் இல்லை என்பது சரியா?

அப்படி இல்லை. அவர் நீட் தேர்வை முழு மூச்சாக எதிர்த்தார் என்பது உண்மையே. ஆனால் ‘சங்கல்ப் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டால் தான் நீட் தேர்வு இந்த அளவிற்கு நாடெங்கும் நடை முறைக்கு வந்தது. ஜெ. முதல்வராக இருக்கும் போதே முதுகலைக்கும் அகில இந்திய சீட்டுக்கும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு வந்து விட்டது. ஜெ. இன்று ஜெ. தமிழக முதல்வராக இருந்திருந்தாலும் தற்போது இருந்த நிலைதான் இருந்திருக்கும். ஏன் என்றல் அவரது நிலைப் பாட்டினை மத்திய அரசு ஏற்றாலும் உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை. ஒரு வருடத்திற்கான விலக்கு மட்டுமே அதிமுக அரசால் பெற முடிந்தது. சென்ற வருடம் அதையும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசின் கைகளை விட்டு உச்ச நீதி மன்றத்தின் கைகளுக்கு நீட் விதிகள் சென்று விட்ட சூழ்நிலையில் ஜெ. உட்பட எந்த ஒரு அரசியல் தலைவராலும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தாமல் மாநில அரசின் சட்டத்தை வைத்து மட்டும் நீட் தேர்வை தவிர்த்திருக்க முடியாது என்று கருதுகிறேன்.

(மேலதிக விவரங்களுக்கு; https://www.quora.com/Which-Private-Colleges-come-under-neet )

தற்போதைய திமுக அரசால் நீட் நழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியுமா?முடியாது.

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு படிக்க முடியாதா?

இப்போதைய சூழ்நிலையில் முடியாது.

AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களுக்கு நீட் ஏன் பொருந்தவில்லை?

ஏன் என்றால் அவை Indian Medical councilன் அதிகாரத்திற்குள் வராத மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் வரும் சிறப்புச் சட்டங்களின் கீழ் நடத்தப்படுபவை.
அந்த நிறுவனங்கள் தொடங்கிய காலம் முதலே தனியான நுழைவுத் தேர்வு மூலமாகத்தான் மாணவர்களை அனுமதித்து வருகின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வுகளை விடக் கஷ்டமானவை. மற்ற மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள் வரும் என்பதால் அவற்றுக்கு நீட் தேர்வு கட்டாயம்.

ஆனால் 2019ம் வருடம் முதல் பாஜக தலைமையிலான நடுவண் அரசு AIIMS மற்றும் JIPMER ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்துவிட்டது

ரஷ்யா, சீனா போன்ற அயல் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு அவசியமா?

2018ம் வருடத்திலிருந்து அதற்கும் நீட் கட்டாயமே.

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோ, யுனானி என்ற அலோபதி அல்லாத மருத்துவப் படிப்புக்கும் நீட் கட்டாயமா?

ஆம், 2018ம் வருடத்திலிருந்து அவசியம்.

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இறுதியாண்டுக் கல்வி முடித்தவுடன் இங்கே மருத்துவராக முடியுமா?

முடியும். ஆனால் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் ப்ராக்டிஸ் செய்ய முடியாது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நீட் தேர்வை நாடெங்கிலும் ரத்து செய்ய வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள் உண்டு.

1. நீதிமன்றம் மூலமாக
2. பாராளுமன்றம் மூலமாக.

1. நீதிமன்றம் மூலமாக.

நீட் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. அதற்கான ஐந்து நீதிபதிகள் கொண்ட பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு ஏகமனதாகவோ அல்லது பெரும்பான்மை (3 out of 5) நீதிபதிகளோ நீட் தேர்வுக்கான Medical Council சட்டத்தின் 10-D பிரிவு செல்லாது என அறிவித்தால் மருத்துவ மாணவச் சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் இருக்காது.

அவ்வாறான தீர்ப்பு வர வாய்ப்பு உண்டா?

நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

2. பாராளுமன்றம் மூலமாக:

ஒரு வேளை நடுவண் அரசில் ஆளுங்கட்சியாக உள்ள ஏதோ ஒரு அரசியல் கட்சி நீட் தேர்வு நமது நாட்டுக்குத் தேவையில்லை என்று கருதினால் பாராளுமன்றத்தில் அதற்கான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை உறுப்பினர்கள் அந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து ஓட்டளித்தால் மெடிக்கல் கவுன்சில் சட்டப் பிரிவு 10-D மற்றும் நீட் தேர்வுக்கான இதர சட்டப் பிரிவுகளை repeal செய்யமுடியும். Indian Medical Councilஐயும் மத்தியப் பட்டியலில் இருந்து மாற்றியாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நீட் தேர்வுக்கு வழி இருக்காது.

அப்படிப்பட்ட நீட் தேர்வு ஒழிப்புச் சட்டம் இறுதியானதா?

இல்லை. ஏன் என்றால் அவ்வாறான ஒரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாராவது வழக்குத் தாக்கல் செய்தால் இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு அந்த நீட் தேர்வு ஒழிப்புச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உயர்/உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.

பாராளுமன்ற நடவடிக்கை மூலம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது நீட் தேர்வை ஒழிக்குமா?

தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு அகில இந்தியக் கட்சியும் அதைச் செய்யாது என்பது என் அனுமானம்.

அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டுமாவது நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க முடியுமா?

அது சாத்தியம்தான். எப்படி என்றால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு பொருந்தாது என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அதற்கு நடுவண் அரசின் சம்மதம் கோரி அதற்கு நடுவண் அரசு ஒப்புதல் அளித்து இந்திய குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்தால் அச் சட்டம் அமலுக்கு வந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்கு மட்டும் பொருந்தாது.

அப்படிப்பட்ட முயற்சி எப்போதாவது எடுக்கப்பட்டதா?

ஆம். செல்வி ஜெ. அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட சட்ட வரைவு ஒன்றை இயற்றி மத்திய அரசின் சம்மதத்திற்காக அனுப்பியது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவிட்டது.

ஒரு வேளை நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தால் என்ன ஆகும்?

நீட் தேர்வு என்பது தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% All India Quota seats for MBBS மற்றும் 50 % All India Quota seats in PG seats மற்றும் புதிய விதிகளின் படி நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் UG and PG இடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற இடங்களை தமிழகம் தன் விதிகளின் படி நீட் தேர்வு இல்லாமல் நிரப்பிக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட மாநிலச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா?

முடியும். ஏன் என்றால் எந்தவொரு சட்டமும் நீதிமன்றத்தின் Judicial Review-க்கு உட்பட்டதே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அச்சட்டம் சேர்க்கப் பட்டால் கூட அச்சட்டத்தை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க முடியும்.

கல்வி என்ற பொருளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் concurrent list என்ற மத்திய , மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலங்களின் தனிப் பட்டியலான State Listக்கு இனிமேல் மாற்ற வாய்ப்பு உண்டா?

அதுவும் சட்டப்படி சாத்தியம் தான்.
ஆனால் தற்போதைய சூழலில் பல காரணங்களுக்காக அது நடக்காது என நம்புகிறேன். கல்வி என்ற பொருள் மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். அதற்கு நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (ஆளுங்கட்சியாக யார் இருப்பினும்) அறுதிப் பெரும்பான்மை பலம் ( மூன்றில் இரண்டு பங்கு) கட்டாயம். மேலும் அந்த மசோதாவை நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதி மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளாவது சட்டமாக இயற்றியாக வேண்டும்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது இதைச் செய்யுமா?

தற்போதைக்கு அது சாத்தியம் என்று எனக்குத் தோன்ற வில்லை. காலம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

நடுவண் அரசு எப்போது கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது?

1976ல் இந்திரா காந்தி தலைமையிலான காங். அரசு 42வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக அதைச் செய்தது. அது இன்று வரை தொடர்கிறது. அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு அதற்கு முன் இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட பல அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற்றாலும் இந்த பட்டியல் மாற்றத்தை திரும்பப் பெறவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசும் அதைச் செய்ய முன்வரவில்லை.

ஏன் செய்யவில்லை?

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் நடுவண் அரசால் அகில இந்திய அளவில் ஒரு பல்கலைக் கழகத்தையோ, ஆராய்ச்சி நிறுவனத்தையோ, கல்லூரியையோ தனியான சட்டமின்றி நிறுவி திறம்பட நடத்த முடியாது. நாடு தழுவிய அளவில் கல்வி நிலையங்களை நடுவண் அரசு தரமாக நடத்தி வருவது எளிதில் சாத்தியப்படாது. எனவே கல்வி என்பது மத்தியப் பட்டியலில் இல்லாது பொதுப் பட்டியலில் இருப்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று கருத இயலவில்லை.
தவிர Indian Medical Council -ம் மத்தியப் பட்டியலில் இருப்பதால் மருத்துவக் கல்வி முழுமையாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வர இயலாது.

மாநிலச் சட்டத்திற்கு நடுவண் அரசு சம்மதம் தர மறுப்பது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது தானே?

இல்லை. இந்தியா ஒரு quasi federal அரசமைப்பைக் கொண்டது.
UK போல unitary ம் அல்ல. USA போல federalம் அல்ல. எனவே மாநில அரசுகளின் சட்டம் அனைத்தையும் நடுவண் அரசு கண்டிப்பாக அங்கீகரித்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. இதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவு விளக்குகிறது. பொதுவாக மாநில அரசின் பல சட்டங்களை நடுவண் அரசு நிறைவேற்ற மறுப்பதில்லை. இந்து சுயமரியாதைத் திருமணம், இந்துப் பெண்களுக்கு பூர்விகச் சொத்தில் சம உரிமை, ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை போன்ற பல விஷயங்களில் இதற்கு முன் தமிழகச் சட்டங்களுக்கு நடுவண் அரசு சம்மதம் கொடுத்திருக்கிறது.

அவ்வாறானால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிப்பதில் நடுவண் அரசிற்கு என்ன தயக்கம்?

மருத்துவக் கல்வியை நாடு முழுவதும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற காங். அரசின் கொள்கையை தற்போதைய பாஜக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றால் அது நாடு முழுவதும் அமலாக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு.
எனவே ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதிலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது என்பது அவர்களது கொள்கைக்கு ஏற்றது அல்ல என்பது அவர்களின் எண்ணம். மேலும் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடை முறைப்படுத்துவதில் காட்டும் வேகமும் மற்றொரு காரணம்.

நீதியரசர் A. K. Rajan தலைமையிலான நிபுணர் குழுவை எதற்காக தற்போதைய திமுக அரசு அமைத்துள்ளது? அந்த குழுவின் அறிக்கையை வைத்து தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா?

நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக அக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் நீட் தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்ட சபையில் தீர்மானம் இயற்றவும், விலக்கு அளித்து சட்டம் இயற்றி நடுவண் அரசின் சம்மதத்திற்கு அனுப்பவும் மட்டுமே அந்த அறிக்கை உதவும். அதை ஒரு வேளை நடுவண் அரசு என்றால் கூட உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ ஏற்காது.

பின் எதற்காக அந்த அறிக்கை, குழு எல்லாம்?

மன்னிக்கவும். நான் அரசியல் பேச விரும்பவில்லை.

இப்பதிவின் நோக்கம் என்ன?

நீட் நுழைவுத் தேர்வுக்குப் பின்னால் உள்ள சட்ட வரலாற்றைச் சொல்வது மட்டுமே.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தற்போதைக்கு யார் கையில் உள்ளது?

உச்சநீதிமன்றத்தின் கைகளில்
—–
Case laws Referred to: (2014) Supreme Court Cases Page 305 And (2016) 4 Supreme Court Cases Page 342

தொகுப்பு; இளம்குமார் சம்பத்
vaisambath@gmail.com

 

]]>
https://vskdtn.org/2021/07/01/neet-eaxam-history/feed/ 1