ஜம்புத்தீவு பிரகடனம் – ஜூன்- 16

1
637
16-6-1801 அன்று மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் கிறிஸ்துவ ஆங்கிலேயனை எதிர்த்து திருச்சி கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனம் செய்த நாள்
தற்போது ஒன்றியம் என்ற வார்த்தை அதிகமாக பிரிவினைவாதிகள் விதைக்கின்றனர்
இதில் நாம் கவனிக்க வேண்டியது ஜம்புத் தீவு பிரகடனம் என்பது பாரதம் மட்டுமல்லாமல் நம்முடைய மிக உயர்ந்த நோக்கமான அகண்ட பாரதம் நோக்கத்தை அப்போதே வெளிப்படுத்தியுள்ளார்கள் மருது சகோதரர்கள்.
ஆம் ஜம்பு தீவு என்பது சரித்திரங்களில் அகண்ட பாரதமாக ஆக இருந்துள்ளது , இருக்கிறது, இருக்கும்.
நாம் இதை தற்போதைய சூழ்நிலைக்கு பிரகடனமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது எண்ணம்.
அதென்ன ஜம்புத் தீவு பிரகடனம் ?
ஜம்புத் தீவு பிரகடனம்
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்:
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.
ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது.
இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் ஜம்புத் தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.
இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்…
இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்…
இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது…
இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…
குறிப்பு:
1801-ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை , திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழிபெயர்த்து சுருக்கித்தரப் பட்டுள்ளது. நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காக அப்போதே ஜம்புத் தீவு பிரகடனம் என்ற விதத்தில் மக்களுக்கு புரியும் படி தேசியத்தையும் காத்து தெய்வீகத்தையும் காத்து நின்றனர்,
போராடினர், வீரமரணம் அடைந்தனர் அவர்களின் வீரத்திற்கு தலைவணங்குவோம்
இந்த ஒன்றியம் என்ற ஓநாய்களின் பொய் புரட்டுகளை அழிப்போம்.
தேசியம் காப்போம்
தெய்வீகம் வளர்ப்போம்
அகண்ட பாரதம் உலகின் குருவாக உயர பாடுபடுவோம்.
வந்தே மாதரம்
பிரகணப்படுத்துவோம்
பகிருங்கள்

1 COMMENT

  1. Amazing! This blog looks just like my old one!
    It’s on a completely different topic but it has pretty much the same page layout and design. Superb
    choice of colors!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here