சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு கண்டுபிடித்த அனுமன் சிலை.

2
285

மயிலாடுதுறை அருகே உள்ள அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.


அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் 1978ஆம் ஆண்டு வெண்கலத்திலான ராமா், சீதை, லட்சுமணா் மற்றும் அனுமன் சிலைகள் திருடப்பட்டன.

கடந்த 2019ஆம் ஆண்டு லண்டனில் ராமா் சிலை இருப்பதை கண்டறிந்து தெரிவித்ததன் அடிப்படையில் லண்டனில் உள்ள இந்திய கலைப்பொருள்கள் சேகரிப்பாளா் ஒருவரிடமிருந்து ராமா், லட்சுமணா், சீதை ஆகிய சிலைகள் மீட்கப்பட்டன.

அனுமன் சிலை மட்டும் கிடைக்கவில்லை. அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் திருடு போன அனுமன் சிலை (கோப்புப் படம்). தற்போது, அனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருப்பதை இந்தியா பிரைடு நிறுவனத்தினா் கண்டறிந்துள்ளனா். 

இந்த அனுமன் சிலையை புதுவை ஆவண காப்பகத்தில் உள்ள புகைப் படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது அனந்தமங்கலம் கோயிலில் திருடப்பட்ட அனுமன் சிலை தான் அது என்பது உறுதியானது. இந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஹிந்து ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

2 COMMENTS

  1. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon everyday.
    It’s always helpful to read through content from other
    writers and practice something from their websites.

  2. I’m impressed, I have to admit. Rarely do I encounter a blog that’s both educative and amusing, and without a doubt, you’ve
    hit the nail on the head. The problem is something that too few folks are speaking intelligently about.

    I’m very happy I stumbled across this in my search for something concerning
    this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here