புலம்பெரும் தொழிலாளர் இடர்பாடுகளை சரியாக கையாண்ட உத்திர பிரதேச யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக அரசை நீதி மன்றம் பாராட்டி உள்ளது.
குரோனா தொற்றுநோய் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வருகின்றனர். அதனால் ஏற்படும் இடர்பாடுகள், வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பல மாநில அரசுகள் சரிவர கையாளவில்லை.
ஆனால், பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச மாநில அரசு, ஒரு தனி இணையதளம், நிவாரண ஆணையர், உணவு பொருட்கள் வழங்கல், மறுவாழ்வு, தொழில் மேம்பாடு, கடனுதவி என மிக சிறப்பாக உத்தர பிரதேச அரசு கையாண்டது. இதனை பற்றி ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது உத்தர பிரதேச அரசு, இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசை பாராட்டியுள்ளது.