முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க கோரிய வேண்டிய வழக்கு தள்ளுபடி.

0
241

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம்.


மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகவும், மதரீதியாகவும் மற்றும் மக்கள் தொகை உயர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் படி இஸ்லாமிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசின் சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2011 ஆண்டுக்கு பிறகு, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்றும், தற்போதுள்ள நிலவரப்படி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் ஜலாலுதீன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here