நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உச்சநீதி மன்றம் மூலம் அங்கீகரிக்கப்பட்டள்ளது. அதனால் மாநில அரசால் ரத்து இயலாது என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்தது. இதை எதிர்த்து பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கிற்க்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், குறிபிட்டுள்ளதாவது ‘‘நீட் தேர்வுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உச்சநீதிமன்றத்தால் சட்ட அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயும் குழு அமைக்க, தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போது மாநில அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளதால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் விழி பிதுங்கி நிற்கிறது திமுக அரசு.
[…] […]