சேலத்தைச் சோ்ந்த 10 வயது மாணவி 31 நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்தார்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கதிர்வேல் – சுதா தம்பதியின் மகள் தா்ஷிகா 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே யோகா மீது அதீத ஆா்வம். தற்போது பொது முடக்கக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
அதைத் தொடா்ந்து, திருச்சி, ருத்ரசாந்தி யோகாலயம், ஜஸ்ட்வின் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், மாணவி தா்ஷிகா ஆடாமல், அசையாமல் 31 நிமிடம் பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவா் தனது தலையில் தக்காளிப்பழத்தை வைத்துக் கொண்டு இச்சாதனையை நிகழ்த்தினார்.