பிரதமர் மோடிக்கும் பாரத நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஊடகம் என்ற பெயரில் இணைய செய்தி தளம் சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது” என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘நியூஸ்கிளிக்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த இணைய செய்தி நிறுவனத்துக்கு 9.59 கோடி ரூபாய் அன்னிய முதலீடாக கிடைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வழிகளில் 28.46 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் சர்வதேச அளவில் நம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில சக்திகள் இயங்கி வருகின்றன.
அதுபோன்றவர்களுக்கும் இந்த தளத்துக்கும் தொடர்பு உள்ளது. நாட்டில் நல்ல விஷயங்கள் நடந்தால் உடனே அதற்கு எதிராக கேள்வி சந்தேகங்கள் விமர்சனங்களை எழுப்புவதே இந்த தேச விரோத சக்திகளின் முக்கிய பணியாக உள்ளது.உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் புதிய பார்லி. வளாகம் கட்டுவதற்கான திட்டத்துக்கு எதிராக குறை கூறி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்தும் பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். இது போன்று பல சம்பவங்கள் உள்ளன. இதனை தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.