பாரத நாட்டில் பெண்களுக்குப் பெருமை சேர்த்த வரலாறு மிக நெடியது. கடந்த நூற் றாண்டில் நம்மிடையே வாழ்ந்த மௌஸிஜி என்ற வரலாற்றில் ஒரு துருவ நட்சத்திரம். தியாகத்தின் மறு உருவமான மௌஸிஜி, தான் மட்டும் அல்லாமல் பெண்கள் சமுதாயத்தையே தலை நிமிர வைத்து, உறுதி படைத்த நெஞ்சுடன் தியாக சீலத்துடன் வாழ வழிகாட்டினார்.
பாரதப் பண்பாடு அழியாமல் சிதையாமல் வேரூன்றி இருக்க காரணமானவர்களில் இவரும் ஒருவர். பாரத நாட்டின் மையப் பகுதியான மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிக்கு அருகே வார்தா என்ற பகுதியில் பாஸ்கர் ராவ் – யசோதாபாய் தம்பதிகள் புதல்வியாய் 1905ம் ஆண்டு பிறந்தார் மௌஸிஜி. அவரின் இயற்பெயர் கமல். அனைவரையும் தனது ஆளுமைத்திறனால் அரவணைக்கும் ஆற்றல், அவருக்கு சிறு வயது முதலே இருந்தது. மிகுந்த விழிப்புணர்வுடைய , நெஞ்சுரத்துடன் கூடிய பெண்ணாக வளர்ந்தார்.
கிருஸ்துவ மிஷனரி பள்ளி ஒன்றில் இவரது ஆரம்பக் கல்வி அமைந்தது. அங்கு கண்டிப்புகளை என்ற பெயரில் நடந்த அவர் அடக்கு முறையை தைரியமாகக் கண்டித்தார். ஹிந்து தெய்வங்களை அவதூறு செய்யும் பழக்கம் அந்தப் பள்ளியில் தொடர்ந்து நிலவியது.
அதனால் லக்ஷ்மிபாய் தன் தாயிடம், “நமது கலாசாரத்தை தொடந்து அவ மதிக்கிறார்கள். அதனால், நான் இனி பள்ளிக்கூடம் செல்லமாட்டேன். நம் முடைய பண்பாட்டுக் கதைகளையும் தெய்வீக பஜனைகளையும் கற்றுக் கொள்ள போகிறேன் ” என்று ஆணித்தரமாகக் கூறி விட்டார்.
இவர்களது குடும்பம் தேசபக்தியில் திளைத்திருந் தது. அருகிலுள்ள பெண் கள் தினமும் முற்பகலில் இவரது வீட்டில் ஒன்றி ணைந்து சுதந்திரப் போராட்ட தலைவர் பால கங்காதர திலகர் நடத்திவந்த ‘கேசரி பத்திரிகையைப் படித்து வந்தார்கள். இது, நமது மௌஸிஜியின் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அக்கால வழக்கப்படி, சிறு வயதிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது, மௌஸிஜி தனது தாயிடம், “வரதட்சிணை வாங்கும் நபரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன்” என்று உறுதிபடக் கூறிவிட்டார். சௌண்டே
மஹாராஜ் என்பவர் பசுவினப் பாதுகாப்புக்காக அமைப்பை ஏற்படுத்தியிருந் தார். மௌஸிஜியும் தனது தாயுடன் அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிளேக்நோய் புணேவைத் தாக்கியது. அந்தச் சமயத்தில், மௌஸிஜியின் குடும்பமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு செய்தது. பிறகு, புருஷோத்தமராவ் கேள்கர் என்ற வழக்கறிஞருடன் லஷ்மிபாய்க்குத் திருமணம் நடந்தது. புருஷோத்தமராவ் குடும்பத்திற்கு அப்பகுதியில் மிகுந்த மரியாதை இருந்தது.
14 ஆண்டுகள் திருமண வாழ்க்கை இனிமையாகக் கழிந்தது. இவர்களுக்கு ஆறு ஆண் குழந்தைகள். கணவர் தீராத நோய்க்கு ஆளாகி காலமாகிவிட்டார். இதனால் மௌஸிஜிக்கு ஏராளமான சுமைகள் வந்து சேர்ந்தன. தனது அன்பான பேச்சால் எல்லாவற்றையும் சமாளித்தார். காந்திஜி நடத்தியசுயராஜ்ய போராட்டத் தில் மௌஸிஜியும் கலந்து கொண்டு, தேச நிர்மாணப் பணிக்காக கஷ்டமான சூழ்நிலையிலும் தனது நகை களைக் கழற்றிக் கொடுத்தார். கணவர் இறந்த பிறகு நாடா வீடா என்ற கேள்வி லக்ஷ்மிபாய் முன் தோன்றியது. கூட்டுக் குடும்பத்தில் இருந்து கொண்டே இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள், அவமானங்கள், இழப்புகள் அவரை பெரிதும் வருத்தின. மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் முன்பே அநீதி கொடுமை இழைக்கப்பட்டது இதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று மௌஸிஜி முடிவெடுத்தார். 1925ல் டாக்டர் ஹெட்கேவார் நிறுவிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நடத்தப்பட்ட
ஷாகா பயிற்சிக்கு மௌஸி ஜியின் மகன்களும் சென்று வந்தனர். அதன் மூலம் மௌஸிஜிக்கு டாக்டர் ஹெட்கேவாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, “நீங்கள் தருவது போன்ற பயிற்சிகளை பெண் களுக்கும் அளிக்க விரும்பு கிறேன். அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று மௌஸிஜி கோரினார்.
அப்பாஜி போன்ற பல சங்க பிரமுகர்களை அனுப்பி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார் டாக்டர்ஜி. “தேசப்பணி, குடும்ப வேலை இரண்டும் இரண்டு தண்ட வாளங்களைப் போல் இணை யாகத்தான் செல்லவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் டாக்டர்ஜி.
அவரது ஆசியுடன் 1936ம் ஆண்டு வார்தா நகரில் விஜயதசமி திருநாளில் ராஷ்ட்ர சேவிகா சமிதி என்ற பெண்களுக்கான அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் மௌஸிஜியின் மனதில் தாக்கம் ஏற்படுத்திக் கொண்ட விஷயத்திற்கு ஒரு வடிவம் கிடைத்தது.
முதலில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் பரவிய ராஷ்ட்ர சேவிகா சமிதி, இன்று நாடெங்கும் பரவி உலகமெங்கும் வியாபித் திருக்கிறது. அது பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அமைப்பாக சக்தியுடன் வளர்ந்து வருகிறது. மௌஸிஜியால் தொடங்கப் பட்ட பல சமூக நலப் பணிகள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
மௌஸிஜி செய்த திருப்பணிகள்
ஜான்சிராணி லக்ஷ்மி பாய்க்கு 1958ல் நினைவுச் சின்னம் நாசிக் நகரில் நிறுவப் பட்டது. இதில் பெண்களுக்கு உதவிடும் வகையில், பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது. 8. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய அகல்யாபாய்க்கு 1964ல் தனது 60வது வயதில் கோயில் எழுப்பினார். அங்கு கலாச்சார சொற்பொழிவுகள், பஜனைகள், விழாக்கள் இன்றும் நடந்து வருகின்றன. அங்கு இலவச நூல்நிலை யமும் அமைக்கப்பட்டுள்ளது. * 1972ல் சத்ரபதி சிவாஜியின் தாய் ஜீஜாமாதாவிற்கு சிறப் பான நினைவு சின்னம் நிறு வப்பட்டது. பசுவதை தடை அருவெறுப்பான பிரசுரங் களுக்குத் தடை தீண்டாமை அகற்றல் போன்ற ஆக்கப் பூர்வ பணிகளை சமிதி ஆற்றி வறுகிறது.
மௌஸிஜி ராமாயண சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அவரது ராமாயண சொற்பொழிவுகள் மாநில மொழிகளிலும் நூலாக அச்சி டப்பட்டு அவரது நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது. தலைமைப் பண்பு, தாய்மை செயல்திறன். கனமிக ஒளி ஆகியவற்றுக்கு வேதாரண மாகத் திகழ்ந்த மொஸின் பாரத பெண்கள் சிறந்த வமிகாட்டி.
நன்றி – விஜயபாரதம்.
காந்தாமணி நாராயணன். ராஷ்ட்ரீய சேவிகா சமிதி.