வாழ்வு கொடுத்த குணவதி

0
276

Audio வடிவில் 

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி சுவாமிமலை முருகன் சன்னிதியில் 15 வயது மதிக்கத்தக்க பெண் முருகனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்கிறாள். என்னுடைய அம்மா நல்ல உடல் நிலையையும் அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். நான் எப்படியாவது கல்லூரி படித்து ஏதாவது அரசாங்க வேலை செய்து ஏழைகளுக்கு தொண்டு செய்யனும் என்னுடைய தம்பி நல்ல பழக்கவழக்கம் ஏற்படனும், படிக்கணும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறாள்.

பக்கத்தில் ஒரு அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள். திடீரென்று மனதில் இந்த வயதில் இவ்வளவு கஷ்டமா? படிக்க வழி இல்லையா அந்த குழந்தைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் , ஏதாவது உதவி செய்யலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. திடீரென்று பார்த்தாள் அந்த குழந்தையை காணவில்லை அவளுக்கு ஏதாவது உதவி செய்யணும் என்ற எண்ணம். ஆனால் முகவரி தெரியாது எப்படி தொடர்பு கொள்ளுவது என்றெல்லாம் தோன்றுகிறது இப்படி ஒரு மாதம் ஆகிவிட்டது திடீரென்று ஒரு நாள் மாலையில் மறுபடியும் அந்த பெண் கோவிலுக்கு வருகிறாள் பிரார்த்தனை செய்கிறாள்.

இதை அந்த அம்மா பார்க்கிறாள் அருகில் செல்கிறாள் குழந்தை உன்னுடைய பெயர் என்ன? வனஜா. உனக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமா? நான் உன்னை படிக்க வைக்கிறேன். நீ கவலைப்படாதே நான் எப்பொழுதும் இங்கு தான் இருப்பேன். நீ எப்பொழுது வந்தாலும் என்னை பார்க்கலாம் என்றாள் வனஜாவுக்கு மனதிற்குள் சந்தோசம் நேராக அம்மாவிடம் சென்று சொல்கிறாள் என்னை ஒரு பாட்டி படிக்க வைக்கிறேன் என்றார் எந்த பாட்டி என்று கேட்கிறாள்.

கோவில் படி அருகில் இருக்கக்கூடிய அம்மா என்றாள் வனஜா. அம்மாவிற்கு மனதில் அந்த பிச்சை எடுக்கக்கூடிய பாட்டியா? அவர்களால் எப்படி படிக்க வைக்க முடியும். அவர்களே சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கிறாள். உன்னை எப்படி படிக்க வைப்பார் வனஜா? என்றார். அதெல்லாம் எனக்கு தெரியாது படிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்றாள். ரிசல்ட் வந்தது வனஜா 90% மார்க்கில் தேர்ச்சி பெற்றாள். கோவிலுக்கு செல்கிறாள். பாட்டியை பார்க்கிறாள் நான் 90% மார்க்கில் வெற்றி பெற்றேன் என்றாள். சரி எந்த ஸ்கூலில் படிக்கப் போகிறாய் என்ன குரூப் என்றெல்லாம் கேட்கிறார். பக்கத்தில் அரசாங்க பள்ளிக்கூடம் இருக்கிறது நான் அங்கு சென்று படிக்கிறேன் என்றாள். உடனே பாட்டி சரி நாளை நல்ல நாள் கும்பகோணத்தில் இருக்கிற சரஸ்வதி பள்ளியில் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய். போய் படி என்றாள் தயங்கி தயங்கி பைசா அதிகம் ஆகுமே! என்ன செய்வது அதைப் பற்றி நீ கவலைப்படாதே நான் படிக்க வைக்கிறேன் என்று கூறி பணம் கொடுத்து படிக்க வைக்கிறாள்.

எனக்கு ஒரே ஒரு உத்தரவாதம் தரவேண்டும். நன்றாக படிக்கணும் நல்ல மார்க் வாங்கணும். அப்பா அம்மாவை கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும். என்றாள். சரி என்றாள் வனஜா நன்றாக படிக்கிறாள் வீட்டில் மின்சாரம் இல்லை. தெருவில் உள்ள விளக்கில் படிக்கிறாள் வீட்டில் நிம்மதி இல்லை. பல நாட்கள் சமையல் இல்லை அப்பா மது அருந்திவிட்டு வந்து அம்மாவை அடிப்பது, குழந்தைகளை அடிப்பது, ஆகையால் சமையல் இல்லை. அம்மா அக்ரஹாரத்தில் இருக்கிற சாவித்திரி மாமி வீட்டில் வேலை செய்கிறாள்.

அவர்களுடைய வீட்டில் இருந்து மீதி வருகிற உணவு கொண்டு வருவாள் அம்மா, வனஜா, தம்பி மூன்று பேரும் சாப்பிடுவார்கள். சில நாள் இரவில் உணவு இல்லை. இருந்தாலும் படிப்பில் கவனம். நன்றாக படிக்கிறாள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவிலுக்கு வருவார் பாட்டியை பார்த்து பேசிவிட்டு செல்வாள். பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் நல்ல மார்க். பாட்டியை பார்க்க வருகிறாள் நீட் தேர்வு எழுத பாட்டி சொல்கிறாள். வேண்டாம் பாட்டி என்று சொல்கிறாள். பாட்டி திட்டுகிறாள். வேறுவழியில்லாமல் படிக்கிறாள் 91 ஆவது ரேங்க்.

சென்னை மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது. தஞ்சையில் படிப்பதா? சென்னையில் படிப்பதா? என்ற குழப்பம். தஞ்சையிலே படிக்கலாம் என்று முடிவு செய்து படிக்கிறாள். இப்பொழுதும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெறுகிறாள். இவளுடைய ஊரில் இவர்தான் முதல் டாக்டர். ஊரே சந்தோஷ படுகிறது. ஊர் தலைவருக்கு ஆச்சரியம். அப்பா குடிகாரர். அம்மா சாவித்திரி மாமி வீட்டில் வேலை செய்கிறாள். யார் இவளை படிக்க வைத்தது. சோற்றுக்கே வழி இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படித்து டாக்டர் ஆகிவிட்டாள். அவளை கௌரவிக்க முடிவு செய்கிறார்.

ஊரில் நடக்கக்கூடிய பொங்கல் திருவிழா போட்டிகளில் பரிசு கொடுக்கும் போது கௌரவிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள் மட்டற்ற மகிழ்ச்சி. பொங்கல் திருவிழா. போட்டி நடக்கிறது இவளை கௌரவிக்கம் அன்றைய தினம் பாட்டியை அழைத்து செல்ல விரும்புகிறாள் வனஜா. பாட்டி முடியாது என்றாள். நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கேட்கணும். இல்லை என்றால் நான் அங்கு போக மாட்டேன் என்றாள் மறுக்கமுடியாமல் பாட்டி போகிறார். வனஜாவை கௌரவப்படுத்துகிறார்கள். இதை பார்த்தவுடன் பாட்டி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நான் டாக்டர் ஆவதற்கு காரணம், அதோ அங்கு இருக்கிற பாட்டி தான் என்னை படிக்க வைத்தார், என்று அறிமுகப்படுத்தி பாட்டியை எழுந்து நிற்கச் சொல்கிறாள் பாட்டி எழுந்து நிற்கிறாள் மீண்டும் கண்ணீர் வடிக்கிறார் – இவர்களை பார்த்தவுடன் தலைவர் இவர்களா? இந்தப் பாட்டி பிச்சை எடுக்கக் கூடியவள் ஆனால் தினசரி காலையில் கோவிலின் முன் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு தெருவில் நிற்கக்கூடிய பூக்களை பறித்து மாலை கட்டி முருகனுக்கு தினசரி கொடுப்பார்கள். கோவிலில் கிடைக்கக்கூடிய பிரசாதம் சாப்பிட்டு கோவில் திண்ணையிலேயே படுக்கக் கூடியவள் என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.

கண்டிப்பாக ஏதாவது பேச வேண்டும் என்று தலைவர் அழைக்கிறார் மீண்டும் டாக்டர் வனஜா வந்து அழைத்துச் செல்கிறாள் மேடைக்கு. பாட்டி எனக்கு பேசத் தெரியாது என்று கூறி பேச ஆரம்பித்தாள் என்னுடைய பெயர் கோமதி. சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி. நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள் என்னுடைய கணவர் இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்தேன். ஒரு ஏக்கர் நிலமும் அதில் ஒரு வீடும் இருக்கிறது. மருமகள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தாள் பக்கத்து வீட்டுக்காரர் அதிகமாக சம்பாதிக்கிறார் நீங்களும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று பிரச்சனை.

நான் ஏதாவது பேசினால் என்னையும் திட்டுவாள் வீட்டில் எனக்கும் பையனுக்கும் நிம்மதி இல்லை உன் தலையெழுத்து நீ எப்படியாவது சமாளித்துக் கோ நான் ராமேஸ்வரம் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு ராமேஸ்வரம் ரயில் வண்டியில் ஏறி புறப்பட்டேன் வண்டி கும்பகோணம் வந்தவுடன் தண்ணீர் பிடிக்கலாம் என நினைத்து கீழே இறங்கினேன். கூட்டமாக இருந்தது. நான் தண்ணீர் பிடித்து வருவதற்குள் வண்டி புறப்பட்டது.

எங்கு போவது என்று தெரியவில்லை பஸ் ஸ்டாண்டிற்க்கு நடந்து வந்தேன். சுவாமிமலை பஸ் நின்றது. அதில் ஏறி முருகனை தரிசனம் செய்யலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். சுவாமியை வழிபட்டு இங்கேயே தங்கினேன். அப்பொழுதுதான் ஒருநாள் இவள் அழுது கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் என் பேத்தி ஞாபகம் வந்தது. இவளுக்கு உதவி செய்வோமே என நினைத்து உதவி செய்தேன் அவ்வளவுதான் அவளுடைய முயற்சி, உழைப்பு, நம்பிக்கை, அவளை மருத்துவர் ஆக்கிவிட்டது.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here