கோயிலை ஆக்கிரமிக்கும் அரசு

0
1962

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த தொண்டை நாட்டுத் திருத்தலம். பேயாழ்வார் அவதாரத் தலமாகவும் உள்ளது. இக்கோயில் டிரஸ்டிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்கோயிலின் தக்கார் பொறுப்புகள் தன்னிச்சையாக ஏற்கப்பட்டதாக கடந்த 13-ம் தேதி ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. இது பக்தர்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்காக கென்னை உயர் நீதிமன்ரத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்களை பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது ஹிந்து அறநிலையத்துறை. மேலும் அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் அறங்காவலர்கள் தவறிழைத்தால், அதற்கு உரிய ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதனை காரணம் காட்டி அரசு கோயிலை அபகரிப்பது என்பது, குரங்கு அப்பத்தை பங்கிட்டு கொடுத்த கதையாக மாறிவிட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here