இஸ்லாமிய பிரிவினைவாதி கிலானி மறைவு; பாகிஸ்தான் தேசியக்கொடி அரைக்கம்பத்தில்.

0
529

ஜம்மு காஷ்மீரின் இஸ்லாமிய பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி கிலானி நேற்றிரவு மாரடைப்பால் ஸ்ரீநகரில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தான் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறப்பது அவருக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு என ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சையது அலி கிலானி காஷ்மீர் பிரிவினை கொள்கையை கொண்டிருந்து. பாகிஸ்தான் உடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். அதற்காக ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாளராகவும் இருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1993-ல் ஹுரியத் மாநாட்டு கட்சியை உருவாக்கினார். இவரது பயங்கரவாத ஆதரவு போன்ற காரணங்களால் பிற தலைவர்களுடன் பிணக்கு ஏற்பட்டது. அக்கட்சியிலிருந்து பிரிந்தார். பின்னர் இவரை பல ஆண்டுகளாக வீட்டு காவலில் வைத்திருந்தனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த கிலானி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கிலானியின் விருப்பம். அதற்கு அரசு அனுமதி தருவது சாத்தியமில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கிலானியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். துக்க தினம் கடைப்பிடிக்கப்படும்,” என கூறியுள்ளார். வாழ்நாள் முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதியாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்கு கடந்த ஆண்டு கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தானை அந்நாட்டு அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here