திருப்பதி தேவஸ்தானதுக்கு தமிழக உறுப்பினராக திமுக சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்து உள்ளது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு- தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் தேர்வானார்.அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அறங்காவலர் குழுவில் 24 உறுப்பினர்கள் மற்றும் எட்டு சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர். தற்போது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிராவை சேர்ந்த 25 உறுப்பினர்கள் மற்றும் 25 சிறப்பு அழைப்பாளர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்து உள்ளது. இதன்படி, வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., நந்தகுமார், சீனிவாசன், கண்ணையா ஆகியோர், தமிழகத்தில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கோவில்களை அழித்து சின்னாபின்னமாக்கியது போதாது என மாநிலம் கடந்து சென்று ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கைவைக்க சென்று உள்ளது. அது எப்படி தெய்வ நம்பிக்கை இல்லாத கூட்டத்தை சேர்ந்தவர்கள் கோவிலை பாதுகாப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.