பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தியை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழை ஹிந்து குடும்பத்தினர் அருகில் உள்ள ஒரு மசூதியிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்தனர். இதனால், தங்கள் மத வழிபாட்டுத் தலத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக்கூறி அங்குள்ள முஸ்லிம்கள் அந்த ஹிந்து குடும்பத்தினரை அடித்து சித்திரவதை செய்தனர். அவர்கள் வீடு திரும்புகையில் மீண்டும் அடித்து துன்புறுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்பதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் கட்சியினரும் உடந்தையாக செயல்படுகின்றனர் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.
Source by – Vijayabharatham Weekly