ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், அமெரிக்க எந்த நாட்டுடனும் பனிப்போரை வளர்க்க விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டுக் கூறினார்.
உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து அமெரிக்க பணிபுரியத் தயாராக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலின்போது இருந்த அமெரிக்கா தற்போது இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னையும், நட்பு நாடுகளையும் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடும். வன்முறைகள், கொடுமைகள் இன்றி சிறுமிகள், பெண்கள் தங்களது உரிமைகளை பெற உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும்.