பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் ஹிந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற மர்ம ஆசாமி பொதுமக்கள் கையில் சிக்கினான்.
அந்த ஆசாமியை பிடித்து விசாரணையை மேற்கொண்ட போது பக்கத்துக்கு ஊரான வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த காதர் ஷான் என்பவரின் மகன் முஹம்மது ஷான் என்பது தெரிய வந்துள்ளது. எதற்கு பூட்டை உடைத்தாய் என்று கேட்டதற்கு கடந்த சில வருடங்களாக இந்த தேர்கள் பூட்டி கிடப்பதால் இதன் உள்ளே என்ன இருக்கு என்று பார்ப்பதற்கும், கோர்ட் ஆர்டர் கொடுத்தும் ஏன் தேர் ஓடவில்லை என்பதாலும் தேரை தீயிட்டு கொளுத்த வந்தேன் என்று தனது வாக்குமூலமாக குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கோவிலில் உள்ளே சாமி பொருட்கள் வைக்கும் மண்டபம் தீப்பற்றி எரிந்தன. அது எப்படி தீ பற்றி எரிந்து என்று விழி பிதுங்கி இருந்த நிலையில் நான்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மண்டபத்தை கொளுத்தினேன் என்று தெனாவட்டாக பதில் கூறுகிறான் முஹம்மது ஷான்.
அந்த தெனாவட்டு திருமகனை பொதுமக்கள் பிடித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக விகளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முஹம்மது ஷான் தான் வைத்திருந்த மொபைல் போனை கொடு அதை பாஸ் வேர்ட் போடு என்று மக்கள் கேக்க, அதெல்லாம் போட முடியாது. போலீஸ் இடம் என்னை ஒப்படைக்கும் போது அவர்களிடம் இதனை ஒப்படைக்குமாறு மக்களுக்கு உத்தரவிடுகிறான் தெனாவட்டு திருமகன் முஹம்மது ஷான்.
இப்படியெல்லாம் நடந்து கொள்ள காரணம் என்ன? இவனுக்கு பின்புலமாக யார் யார் உள்ளனர் என்று விசாரிக்க வேண்டும். இவ்வளவு திமிராகவும் தெனாவட்டாகவும் பதில் சொல்வதால் அவனுக்கு பெரிய பின்புலம் இருக்கலாம் என்றும், காவல்துறையிடம் ஒப்படைக்க மக்களுக்கு உத்தரவிடுவதால் காவல்நிலையத்தில் இருந்து காப்பாற்ற ஆள் பலம் இருக்கலாம் என்கிற சந்தேகமும் கூடுகிறது என வி.களத்தூர் மக்கள் ஆதங்கம் தெரிக்கின்றனர்.