பாதிரி ஜார்ஜ் பொன்னையா வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு

0
789

ஹிந்து கடவுள்கள், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள பாதிரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். அப்போது இவ்வழக்கு சம்பந்தமாக ஆஜரான கன்னியாகுமரி மாவட்ட வி.ஹெச்.பி. தலைவர் குமரேசதாஸ், ‘மனுதாரர் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது’ என்று மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிபதி நவம்பர் 12ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here