ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த 2019, 2020களில் நடைபெற்ற இரண்டு வளாக வன்முறைகளில், சுவாமி விவேகானந்தரின் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீதும் ‘விவேகானந்த் மார்க்’ மற்றும் ‘சாவர்க்கர் மார்க்’ வழிகாட்டுப் பலகைகளை சேதப்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர் அமைப்பு, அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எம் ஜெகதீஷ்குமாரிடம் கடிதம் அளித்துள்ளது. அதில், இச்செயல் மாணவர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த இடதுசாரி மாணவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது, ஜே.என்.யு’வின் மதிப்பை குறைத்துவிட்டது. அவர்கள் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.