நவராத்திரி கொலு போட்டி

0
586

சம்ஸ்கார் பாரதி அமைப்பு, சென்னை மாநகரில் நவராத்திரி திருவிழா கொலுப்படி போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், குறைந்தபட்சமாக 5 படிகள் கொண்டு அலங்கரித்த கொலுப்படிகளை, அதன் அலங்காரம், பொம்மைகளுடன் ஒரு நிமிட வீடியோவாக எடுத்து அனுப்பலாம். அதனை பார்வையிட அழைப்பவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கொலுவை பார்வையிடவும் இவ்வமைப்பினர் தயாராக உள்ளனர். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம், 2ம் பரிசாக 1,500, 3ம் பரிசாக 1,000 மற்றும் 2 நபர்களுக்கு தலா 500 வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9884173502 / 9840349875 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here