ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் 2020 அறிக்கையின்படி, முதல் முறையாக முதல் 25 பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் பாரதமும் இணைந்துள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும்,’பாதுகாப்பு ஏற்றுமதி என்பது நமது திறன், திறமை, உயர் தரத்தை பறைசாற்றுகிறது. பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகவும், பாரதத்தை உலகளாவிய பாதுகாப்புத் தளவாட விநியோகச் சங்கிலியின் ஒரு முக்கிய பகுதியாக மாற்றுவதற்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 2024 – 2025 க்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு சேவைகளின் ஏற்றுமதியை ரூ. 35,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.