கோயில் சொத்து ஆக்கிரமிப்பு

0
473

ஹிந்துக்களை அவமதிப்பதையே தங்கள் முழுநேர வேலையாக செய்துவரும் தி.மு.கவினர், கோயில் நகைகளை உருக்குவது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது என ஹிந்துவிரோத செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் சமீபத்தில், திருமழிசையாழ்வார் பிறந்த தலத்தில் வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிக்க தி.மு.க., பிரமுகர் ஒருவர் முயற்சித்து வருகிறார். திருமழிசை பேரூராட்சியில் உள்ள ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் திருமழிசை ஆழ்வாருக்கு சன்னதி உள்ளது. இது திருமழிசை ஆழ்வார் பிறந்த தலம். இக்கோயிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், சட்டவிரோதமாக, அங்கு வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here