நேபாளத்தில் மக்களை வழிநடத்தும் அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் தொடர் தோல்விகள், அரசியல் கட்சிகளின் ஊழல்கள் போன்றவை மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் மன்னராட்சி மற்றும் ஹிந்து ராஷ்டிரம் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுத்து வருகிறது. ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனா, நிலையற்ற அரசியல் சூழல் மட்டுமல்ல தற்போது அங்கு நீதித்துறையும் ஸ்தம்பித்துள்ளது. நேபாளத்தின் அனைத்து நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகக் திரண்டு அவர் ராஜினாமா செய்யக் கோருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு மேலாக உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை. நேபாளத்தில் பத்து வருட மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் அவர்களின் ஆட்சி அமைந்தது. ஆனால், அவர்களின் வருகைக்குப் பின்னரும் 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய்விட்டனர். 2006ல் மாவோயிஸ்டுகள் வாக்களித்த ஸ்திரத்தன்மை, நல்லாட்சியைக் கொண்டுவருவதில் தோல்வியடைந்ததையே இது குறிக்கிறது. அதற்கு முன்பாக மன்னராட்சியில் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.