சாமி சிலைகள் உடைப்பு பின்னணி

0
690

பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில், செல்லியம்மன், பெரியசாமி கோயிலில் உள்ள சாமி சிலைகள் தொடர்ந்து 4 முறை இரவில் சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. தமிழக அரசும் காவல் துறையும் இதுவரை சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுவாச்சூர் கோயில்களுக்கு பகலில் செல்வதே சவாலான விஷயம் எனும்போது, மனநிலை பாதித்த ஒருவர் இப்படி செய்ய வாய்ப்பில்லை. இதனை தனியொருவர் மட்டும் செய்திருக்க முடியாது. சிலைகள் உடைப்பில் அனுபவம் பெற்றவர்களால் தான் இதனை செய்திருக்க முடியும். இந்த விஷயத்தில் காவல்துறையும் ஹிந்து சமய அறநிலையத் துறையும் அலட்சியமாக உள்ளது, இதன் பின்னணியில் மர்மம் இருப்பதை காட்டுகிறது. இதேபோல, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திர பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மராவ் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அதன்பிறகே ஆந்திர அரசு கவனம் செலுத்தி விசாரித்தது. இதன் பின்னணியில் மதமாற்ற அடிப்படைவாத சக்திகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆந்திராவைபோல, தற்போது தமிழகத்திலும் கோயில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியிலும் மதமாற்ற சக்திகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம் என பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here