ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பத்திரிக்கை

0
922

ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கடவுள்கள் மீது ஆழமாக வேரூன்றியிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில், பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ‘வாய் ஸ் ஆப் ஹிந்த்’ இதழில், கர்நாடகாவில் உள்ள முருடேஷ்வரா கோயிலில் உள்ள 123 அடி சிவன் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு அதன் உச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ் கோடி வைக்கப்பட்டது போன்று மார்ப்பிங் செய்யப்பட்ட ஒரு படத்தைக் தனது இதழின் அட்டையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. மேலும் ‘பொய்க் கடவுள்களை உடைக்க வர வேண்டிய நேரம் இது’ எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வட கர்நாடக மாவட்டத்தில் உள்ள முருடேஷ்வரா பிரபலமான யாத்திரை தலமாகும். இந்த புகைப்படம் அங்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, முருடேஸ்வரா கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பா.ஜ.க எம்.எல்.ஏ தினகரன் கேசவ் ஷெட்டி மற்றும் பொதுமக்கள் பலர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உள்துறை அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here