இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.14வது இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில், டில்லியில் இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பியுமியோ கஷிடோ சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவு மற்றும் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.