தி காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
இவர்தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ் (TheKashmirFiles) திரைப்படத் தயாரிப்பாளர். ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
4 வருடங்களுக்கு முன்பு விவேக் அக்னிஹோத்ரி இவரை சந்தித்து படத்தின் கதையை விவரித்துள்ளார். இப்படம் தயாரிப்பதற்காக திரட்டிய ஆதாரங்களில் வெறும் 30% மட்டுமே திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் அபிஷேக் அகர்வால்.
கொரோனா தொற்று மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு செய்திட காலதாமதம் ஏற்பட்டது.
இத்திரைப்படத்திற்காக விளம்பரம் எதுவும் பெரிய அளவில் செய்யப் படவில்லை.
20 கோடி செலவில் தயாரான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியாகி 7 நாட்களிலேயே ரூ.108 கோடி வசூல் ஆகியுள்ளது. இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் நாடெங்கிலும் அதிகரிக்க வேண்டும்.