பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கிராமங்களில் நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டன. நீர்த்தேக்கங்களில் தண்ணீரை தேக்கி பராமரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தினார்கள் ஆறு மற்றும் அணைக்கட்டுகள், கரைகளை கட்டுதல், இந்த பணிகளை கிராம மக்களின் உதவியோடு கிராம நிர்வாகமே செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அருகே உள்ள திருமுக்குளம் என்ற புனிதமான குளம் ஊர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது.
13 ஆம் நூற்றாண்டில் அரசாட்சி செய்த குலசேகரபாண்டியன் என்பவர் இந்த குளத்தை பராமரிப்பதற்காக சில வாய்க்கால்களை வெட்டி குளத்தோடு இணைத்தார் பாசன வாய்க்கால்களுக்கு சில காவலர்களும் போடப்பட்டு எப்பொழுதாவது எங்கேயாவது கசிவு ஏற்பட்டால் உடனே ஆட்களை வைத்து சரி செய்து தடையில்லாமல் தண்ணீர் வழங்கி விவசாயத்திற்கான உதவிகளை செய்து விடுவார்கள் . அந்த மாதிரி காவலர்கள் குடி இருப்பதற்காக மறவாக்குறிச்சி என்ற கிராமத்தில் அவர்களுக்கு வீடும் கொடுக்கப்பட்டது.
திருநெல்வேலியில் கோவில்களில் தொண்டுப் பணிகளில் செய்தனர். காளையார்கோவில் இடம் மேட்டுப் பகுதி வானம் பார்த்த பூமியாக இருந்தது.
14ஆம் நூற்றாண்டில் பெரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழியும். தேவரடியார்கள் அவர்கள் இந்த நிலத்தை வாங்கி உபரி நீரை இறைத்து விவசாயம் செய்தனர் .அந்த மாதிரி மேட்டுப்பாங்கான இடத்தை வாங்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்த வரியும் விதிப்பது இல்லை. மாறாக அவர்கள் கோவிலுக்கு நெல் கொடுக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது .
கோவில் குளம் வருமானத்தை அரசாங்கம் அந்த கோவிலுக்கு சந்தனகாப்பு செய்வதற்காக செலவு செய்தது .கொடைவள்ளல்களும் தங்கள் பங்குக்கு கோவில்களுக்கு செய்து வந்தனர் .சில நேரங்களில் கோவில்களில் உள்ள குளங்களில் மீன்கள் ஏலத்தில் விடப்பட்டன. ஏலம் மூலம் வரும் வருமானத்தை குளத்தை ஆழப்படுத்தும் பணிகளுக்கும், கரைகளை வலுப்படுத்தவும், செலவிடப்பட்டது. இத்தகைய வேலைகள் அனைத்தும் உள்ளூர் கிராம மக்களின் உதவியோடு கிராம நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டனர், அந்த நாட்டின் அரசனும் அரசின் அமைச்சரும் அவர்களது நிர்வாகத்தில் குறுக்கிடுவதில்லை. அவர்களுக்கு தனியாக அது சம்பந்தமான சட்ட விதிகளை வரையறை செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. தாமிரபரணி, வைகை , ஆறுகளில் பல கால்வாய் வெட்டப்பட்டு கடைக்கோடியில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி செய்யப்பட்டது.
நிலங்கள் பிரிக்கப்படும்போது ஆற்றுப் பாசன வசதி பெறும் பாதைகளும் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. நிலங்கள் இல்லாத சிலருக்கு கூட பாசன பாதையில் ஆற்று நீர் உபயோகப்படுத்த உரிமை உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. நாங்குநேரி பெருமாள் கோவில் அருகே உள்ள குளம் மீன் ஏலம் விடப்பட்டு அந்த வருமானம் குளத்தை பராமரிக்க பயன்படுத்தப்பட்டது.
17ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நிர்வாகத்தில் தர்மத்தை கடைபிடித்து நீதி நெறி வழுவாமல் அரசாட்சி செய்து வந்தனர் தனிப்பட்ட குடி மகனுடைய உரிமையும் பாதுகாக்கப்பட்டது மரபு வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.