கோயிலின் கர்ப்பகிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் சிதைந்துள்ளன. பிற்கால கட்டட, சிற்பக் கலைகளை பார்க்கும் போது பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களின் பங்களிப்பு தெரிகிறது. கருவறையில் எந்த சிலையும் இல்லை. வைணவ தலம் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
கோயில் நுழைவாயில்துாண்களில், நான்கு அடி உயர கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள்வைணவ தலம் தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
துாண்களில் வைணவ திருநாமம், சங்கு, சக்கரம், நரசிம்மர் சிற்பங்கள் உள்ளன. நடன மங்கையர், பெண் பேறுகால நிகழ்வை குறிக்கும் புடைப்பு சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.முன் மண்டப இடது ஓரம் செவ்வக கல்லில் உள்ள ஆட்டுக்கல் மருந்து தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை காட்டுகிறது. இங்கே விழுந்து கிடக்கும் ஒரு கல்லில் இரண்டு மீன்களின் உருவங்களுக்கு நடுவில் செண்டு பொறித்த சின்னம் காணப்படுகிறது.