வளர்ச்சியடையும் எம்.எஸ்.எம்.இ துறை

0
213

சிறு குறி நடுத்தரத் தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ) துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவன விவரங்களை பதிவு செய்வதற்காகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளுக்காகவும் மத்திய அரசு ‘உதயம்’ என்ற இணையதளத்தை துவங்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ’க்கள் எளிதான வணிகம் செய்ய ஏதுவாக, பதிவு செய்யும் பல விதிமுறைகளில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஜூன் 26, 2020ல் தொழிற்துறை அமைச்சகம் சிறு குறு மற்றும் நடுத்தர அமைச்சகம் இந்தத் துறையினருக்கான வரையறையை மாற்றியமைத்தது. மேலும், சில்லறை வர்த்தகர்களையும் உள்ளடக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.எஸ்.எம்.இ தளத்தை அரசு விரிவுபடுத்தியது. இந்த இணையத்தில் மார்ச் 2022 நிலவரப்படி, 79.27 லட்சம் எம்.எஸ்.எம்.இ’க்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 75.41 லட்சம் குறு நிறுவனங்கள், 3.50 லட்சம் சிறு நிறுவனங்கள் மற்றும் 35,773 நடுத்த நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உதயம் போர்டலில் பதிவு செய்யப்பட்ட 28,684 குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும் 3,679 சிறு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வளர்ந்துள்ளன என்ற நேர்மறையான தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here