ஆர்.எஸ்.எஸ் குறித்து இஸ்ரேல் தூதர்

0
521

பாரதத்தின் மத்திய மேற்கு பகுதிக்கான இஸ்ரேல் தூதராக நியமிக்கபட்டுள்ள கோபி ஷோஷானி, 1992ல் டெல்லியில் தூதரகத்தை நிறுவ உதவுவதற்காக முதன்முறையாக பாரதம் விஜயம் செய்தார். அப்போதிலிருந்து அவருக்கு பாரதம் மீதான அபிமானமும் அன்பும் குறையவில்லை. இதற்கு முன்பு பல முறை அவர் நம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாரத இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான நட்பு, ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், கலச்சார உறவுகள் தண்ணீர் பயன்பாடு தொழில்நுட்பம், எதிர்கால உறவுகள், சுற்றுலா என பல விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குறித்த தனது பார்வையை பகிர்ந்துகொண்டார். ‘எனது முந்தைய பாரதப் பயணங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் பணியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் நடத்தப்படும் சில சேவைப் பணிகளை பார்வையிடும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தன. நான் அவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றிய நுண்ணறிவைப் பெற விரும்பினேன். அதனால் நாக்பூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். என்னை பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத அமைப்பு. அது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது என் அபிப்பிராயம். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும், மனிதர்களின் அமைதியான சகவாழ்வை உறுதியாக அது நம்புவதாகவும் நான் உணர்கிறேன்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here