சமயபுரம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

0
430

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும், பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் சமயபுரம் கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவிலில் பக்தர்களுக்காக சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் மாசி கடைசி ஞாயிறு, பங்குனி கடைசி ஞாயிறு வரை விரதம் மேற்கொள்வது தனிச் சிறப்பாகும். சிறப்பு மிக சித்திரைப் பெருவிழா இன்று ஏப்.10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிப் பட்டம் சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உற்சவ அம்பாள் கேடயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரம் அருகில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here