தில்லி விஞ்ஞான் பவனில் சங்கீத நாடக அகாதெமி, லலித் கலா அகாதெமி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாடகக் கலை மற்றும் நுண்கலைத் துறையில் பங்காற்றிய பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்களுக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு கூறியது அதிகம் அறியப்படாத நாயகா்கள் பலா் நமது சுதந்திரத்துக்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளனா். வரலாற்றில் ராபா்ட் கிளைவ் பற்றி நமக்கு கற்பிக்கப்பட்டதே தவிர ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, கொமரம் பீம் ஆகியோர் பற்றி போதிய அளவு கற்பிக்கப்படவில்லை. இந்தத் தவறை திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். அதிகம் அறியப்படாத இந்த தியாகிகளின் தியாக உணா்வையும் பங்களிப்பையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.புதிய தேசிய கல்விக் கொள்கை இதன் மீது கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அலுவலகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.