பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ‘ஹெலினா’ இரண்டாவது முறையாக பரிசோதனை

0
277

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. அடுத்தடுத்த நாள்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டது. ஏவுகணை, பீரங்கி இலக்கை மிகத்துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை சோதனையை மூத்த ராணுவத் தளபதிகள், டிஆா்டிஓ விஞ்ஞானிகள் பார்வையிட்டர் . ஹெலிகாப்டரில் இருந்து ஏவி சோதனை விடப்பட்டதையடுத்து ‘இமேஜிங் இன்ஃப்ரா ரெட் சீக்கா்’ உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஹெலினா ஏவுகணைகள் ராணுவத்தில் சோ்க்கப்பட உள்ளன. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இருந்து ஹெலினா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாலைவனப் பகுதியில் அது தனது செயல்திறனை நிரூபித்தது. ஹெலினா மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும். இது நேரடியாகவும், உயரத்தில் இருந்தும் தாக்கவல்லது. அனைத்து வானிலை மற்றும் இரவு பகல் எந்நேரத்திலும் எதிரிகளின் தாக்குதல் வாகனங்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here