சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நம் தேசம் சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த காலத்தில் நாம் ஏராளமான சாதனைகளை செய்து உள்ளோம். நம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் நம் மண்ணின் வளம் மிகவும் குறைந்து விட்டது. மண் வளத்தை பாதுகாப்பதற்காக, மண் காப்போம் என்ற இயக்கத்தை நாம் துவங்கியுள்ளோம்.மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, லண்டன் முதல் தமிழகம் வரை பைக்கில் நான் பயணித்து வருகிறேன். மண் வளத்தை பாதுகாக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும். இதில், தமிழ் மக்கள் அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். நமக்கு தாயாக விளங்கும் தாய் மண்ணை காப்பாற்ற, தமிழ் புத்தாண்டில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.