காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்

0
404

 

ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள படிகம் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முன்னதாக, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு, பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் ; இருவர் காயம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here