மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

0
189

திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊரடங்கு தளர்வுகொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இந்தாண்டு ஊரடங்கு தளர்வால், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பத்தாம் நாளான நேற்று, திருக்கல்யாண திருவிழா நடந்தது. விழாவின் பதினோராம் நாளான இன்று (ஏப்.15) , தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடக்கிறது.சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி, நாளை (ஏப்.16) காலை 5:50 முதல் 6:20 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை 6:45 மணியளவில் அழகர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டார்.வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை தமுக்கம்,கருப்பணசாமி கோவில் முன் ஆயிரம்பொன்சப்பரத்தில் சுவாமிஎழுந்தருளுகிறார் தொடர்ந்து, தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here