8 நாட்கள் சுற்றுப்பயணம் மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை

0
195

இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் நேற்று முதல் 24-ந் தேதி வரை 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். திட்டத்தின்படி நேற்று அவர் விமானம் மூலம் மும்பை வந்தார். அதிகாலை 1.20 மணி அளவில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வருகிற 19-ந் தேதி குஜராத் செல்ல உள்ளார். அங்கு ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.அதேபோல வருகிற 20-ந் தேதி உலகளாவிய ஆயுஷ் முதலீட்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேரில் சந்திக்க உள்ளார். இந்திய சுற்றுப்பயணத்திற்காக மொரீஷியஸ் பிரதமரின் மனைவி கோபிதா ஜுக்நாத் மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட குழுவும் உடன் வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here