போன வாரம் தொலைகாட்சி செய்தியில்

0
210

“தர்மபுரி, கிருஷணகிரி பகுதி மா விவசாயிகளுக்கு கடும் நஷ்டம்”னு செய்தி ஓடிக்கொண்டு இருந்தது..

அதை என்னோட அம்மா மும்மரமா பார்த்துட்டு இருந்தாங்க..

இடையில் விவசாயி ஒருவர் பேட்டி இப்படி கொடுக்கிறார்,

“ஓரளவு தண்ணீர் வசதி இருந்ததுங்க,

சரி எப்படியோ இந்த வருஷம் மகசூலில் லாபம் பார்க்கலாம்னு நினைச்சோம்ங்க,ஆனா இந்த தேனீக்கள் வந்து மா பூவில் உட்காந்து நிறைய பூ கொட்டிடுச்சுங்க..!

நாங்களும் 5,6 மருந்து அடிச்சும் பார்த்தாச்சு..

ஒன்னும் பெருசா மாற்றம் இல்லைங்க” இப்படியாக அந்த செய்தி ஓடுது..

 

அட அப்பாவிகளா..!

தேனீ இல்லைனா மகரந்த சேர்க்கை நடக்காது.

மகரந்த சேர்க்கை இல்லைனா எப்படி மகசூல் அதிகமாகும் என்கிற விசயம்கூட தெரியாம பலநூற்றாண்டா விவசாயம்  செய்கிறோமே..!?

இங்கதான் உரகம்பெனிக்காரன் ஜெயிக்கிறானே..

“காக்கா உட்காந்து

பனம்பழம் விழுந்த”மாதிரியே செய்தி ஊடகம் வாந்தி எடுப்பதுதானே வாடிக்கை ஆகியிருக்கு..

இதை எல்லாம் தாண்டி எங்க ஊர்ல இப்ப புதுசா ஒன்னு ஆரம்பிச்சு இருக்காங்கங்க..!

அதாவது செவ்வாழை குழை தள்ளியதும்

பூவை ஒடிச்சுட்டு

தார்க்குள்ளேயே நீளமான நெகிழியை (பாலித்தீன்) சொருகிடுறது..

இது எதுக்குனு கேட்டா,

அப்பதான் செவ்வாழை காயோட கலர் மங்காதுனு விஞ்ஞான பூர்வமான பதிலும் வருது..!

பூவை ஒடித்தாலே தேனீக்கள் வருவது

குறையுதுனு வாழை அறுவடை வரைக்குமே பூவை ஒடிப்பதில்ல நாங்க..

ஆனா தேனிக்களுக்கு வாழை காட்டுக்குள்ளேயே வராமதானே இந்த நெகிழியை போட்டு மூடுறாங்க..!

தேனீக்கள் நம்ம பூமிக்குள்ள வரலைனா

 உணவுசங்கிலி அறுந்துவிட்டதாகத்தானே அர்த்தம்..

நல்லா கவனித்து பார்த்தீங்கனா புரியும்

சமீபகாலமா செய்தி ஊடகம் ஒரே மாதிரி இரண்டு விசயத்தை அதிகமா வாந்தி எடுக்கிறது..!

ஒன்னு

“இலங்கை முழுசா இயற்கை விவசாயத்தை கையில் எடுத்ததால்தான் கடும் பொருளாதார நெருக்கடி வந்துவிட்டதாம்..

இன்னொன்னு

“எலக்ட்ரிக் பைக் வெடித்து தீ பிடிப்பது”.

அதுக்காக எலக்ட்டிரிக் பைக் தீ பிடிக்கலைனு நா சொல்லவே இல்ல..

ஆனா எனக்கு என்ன சந்தேகம்னா இத்தனை ஆண்டுகளா LPG கேஸ் பயன்படுத்துறோம் அது வெடித்ததே இல்லையா.?

சாதாரண பெட்ரோல், டீசல் வாகனங்கள் தீபிடித்து எரிந்தது இல்லையானு கேட்டா பதிலே வருவதில்லை..

பிறக்கிற குழந்தையில் ஒருசில குழந்தை மூளைவளர்ச்சி இல்லாமல்தான் இப்பவரை பிறக்குது.

தவறான சிகிச்சை கொடுத்து வயிற்றிலேயே இறந்து பிறக்கிற குழந்தையும் இப்பவும் இருக்கு..

அதுக்காக வாகனம் ஓட்டாம இருக்கிறோமா?

இல்லை குழந்தைதான் பெத்துக்காம இருந்திடுவோமா.?!!

இலங்கையில் நடந்தது தவறான பொருளாதார கொள்கையை கையில் எடுத்துட்டு

குறிப்பிட்ட ஒரு இனத்தை அழிக்க

அரை நூற்றாண்டை காவு கொடுத்து இருக்காங்க..

அதில் வெற்றியும் கிடைச்சது

ஆனா அதுக்காக வாங்கிய கடனை கட்ட முடியாம வேறு நாட்டுக்கிட்ட சிக்கி இப்போ சீக்கி அடிக்குது..!

ஆனா வெளியே சொல்றது

“இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து இலங்கை நாசமா போச்சுனு..!

இரண்டாம் உலக போருக்கு பிறகு

இனி மூன்றாம் உலக போர் வராதுனு மிச்சம் மீதி இருந்த நச்சை

உரம்ங்கிற பெயரில் நம்ம தலையில் கட்டி கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலே நம்ம விவசாயிகள் பச்சைபுரட்சி விவசாயத்தில் சிக்கி என்ன பாடுபடுறோம்னு நமக்கு நல்லாவே தெரியும்..

மிச்சம் இருந்த நச்சை கையில் எடுத்தவர்களுக்கே இந்த நிலமைனா,

முழுசா நச்சையே தோட்டாவாக்கி வெடியா பயன்படுத்திய இலங்கைக்காரன் என்ன ஆவானு யோசிச்சு பாருங்க..!

அதுக்காக தொலைகாட்சி செய்தியை பார்க்கவேண்டாம்னு நா சொல்லலங்க..

பாருங்க..!

நல்லா பாருங்க..!!

அவன் எதை, எவனை

மோசம்னு எழுதி வாந்தி எடுக்குறானோ

அவன் ரொம்ப நல்லவன்னு முடிவு செய்திடுங்க..!எதை, எவனை நல்லவனு சொல்றானு அவன் படும் மோசமானவானாத்தான் இருப்பான்

உறுதியாகிடுங்க..!

இது விவசாயிகளுக்கும் பொருந்தும்,மத்தவங்களுக்கும் பொருந்தும்..

 

 

  • கிருஷ்ண முத்துசாமி ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here