தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார். இந்நிலையில் 293வது ஆதினம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, 500 ஆண்டுகளாக நடைபெறும் பழக்கம் இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இதன் உள் நோக்கம் என்ன? தருமபுர ஆதினமும், துருவாவடுதுரை ஆதினமும் இது போன்று பட்டின பிரவேசம் செய்கிறது. ஆன்மீகத்தில் அரசியல் வாதிகள் தலையீடு உள்ளது. தமிழக முதல்வரே முன்னின்று இந்த நிகழ்வை நடத்தி வைக்க வேண்டும். தடை செய்யப்பட்டதை நினைத்து நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.பட்டின பிரவேசம் தடை தொடர்ந்தால், சொக்கநாதரிடம் முறையிடுவேன். நானே சென்று பட்டின பிரவேசம் நடத்துவேன். ஏனென்றால் நான் அந்த மடத்தில் வளர்ந்தவன். ஆங்கிலேய ஆட்சிகாலத்திலே, பட்டின பிரவேசம் நடந்தது. கலைஞர் காலத்தில் நடந்தது. தடையை நீக்கா விட்டேல் நானே தடையை மீறி பட்டின பிரவேசம் நடத்துவேன். எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம்.