இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இதுவே

0
212

 

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதற்கு முன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டு தான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவம் கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் முருகனை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை என்று ஆலயம் வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு

கப்பற் படையின் தளபதி எழிலரசன் சூசை ஆண்டனியாக மாறிய பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரனும் விக்டர் பிரபாகரன் என்று மாறிய பிறகு இந்த வழக்கம் நின்று போனது.

அதன் பிறகு தான் பிரபாகரனின் வீழ்ச்சி தொடங்கியது. முதலில் இராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் தொடங்கிய குழப்பம், தடுமாற்றம், தவறான முடிவுகள் எல்லாம்

அவரின் நம்பிக்கை நட்சத்திரம் அசைக்க முடியாத புலிகளின் ஆளுமையாக ‌இலங்கை உளவு பிரிவு க்கு சிம்ம சொப்பனமாக இருந்த ‌கேப்டன் தமிழ்ச்செல்வனும் அவரது ஆயுதம் மற்றும் தங்கம், கரன்சி என்று கிட்டத்தட்ட புலிகளின் பொருளாதார களஞ்சியம் என்ற ரீதியில் வந்த புலிகளின் கப்பல், இந்திய உளவுத்துறை யால் குறி வைத்து நடுக் கடலில் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

அன்று தகர்ந்தது வெறும் கப்பல் மட்டுமே அல்ல. பிரபாகரனின் ஈழ கனவும் தான். அன்று மூழ்கியது தமிழ்ச் செல்வன் என்ற வீரம் மட்டும் இல்லை. பிரபாகரனை நெருங்கிய மதமாற்றம் என்ற பேயை விரட்ட வேண்டும் என்று முயற்சி செய்த ஒரு இந்து தமிழனும் ஆவான்.

அன்று தொடங்கிய புலிகளின் வீழ்ச்சி இன்று நாடு கடந்த தமிழீழம்‌ என்று முழுவதும் கிறித்தவ மிஷனரிகளின் கைப்பாவையாக மாறி போனது.

அன்று தொடங்கிய பிரபாகரனின் சரிவு இறுதியில் அவரின் விருப்பமான கடற்கரை பிரதேசமான நந்திக்கடல் மணலாறு கழிமுகத்தில் முடிந்தது.

நீதி.

குலதெய்வ வழிபாடு கூட இருந்து காக்கும் கலசமாகும். நம்மை உடனிருந்து நல்வழிப்படுத்தும் கேடயமாகும்.

மதமாற்றம் வெறும் கடவுள் மாற்றம் இல்லை. அது நமக்கு நாமே செய்யும் தற்கொலை முயற்சி.

பின் நாளில் இதே இலங்கைக்கு தமிழர் பாதுகாக்க போறோம்னு ஒரு கும்பல் போய் மகிந்த வீட்டில் விருந்து சாப்பிட்டு பரிசு வாங்கி ஈஈனு இளிச்ச போட்டோலாம் எடுத்துட்டு வந்தாங்க.

ஆனால் அங்கு அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை. இங்கு அவர்கள் சில தொகுதிகளை வெல்ல ‌உதவியது. பல கோடிகளை குவித்தது.

தற்போது பாஜக அரசு இலங்கை தமிழர் துயர் துடைக்க ஒரு தமிழக தமிழர் என்ற ரீதியில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை அனுப்பி இருக்கிறது.

இதற்கு முதற் காரணம் ‌ஜெய்சங்கர் சுப்பிரமணியம் என்ற இன்னொரு தமிழர் என்பதை மறுக்க முடியாது யாரும். இது ஒரு வரலாற்று சாதனை யின் பிள்ளையார் சுழி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

எங்கு போனாலும். மகுடம் சபையின் நடுவே சேரும் செருப்பு வாசலுக்கு வெளியே தான் இருக்கும் என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே நான் மேலே சொன்ன குறிப்பின் சாராம்சம் புரியும்

நான் ஏதோ திருமா கும்பலின் இலங்கை பயணம். திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் இலங்கை பயணம் இரண்டையும் தான் இப்படி குறிக்கிறேன் என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இந்து உறவுகளே

நான் அவ்வளவு பொல்லாதவள் இல்லை கொஞ்சம் நல்லவள் தான்.

எழுதி வச்சிக்குங்க மக்களே

திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வெறும் மாநில தலைவர் என்பதை கடந்து தேசிய சர்வதேச முகமாக ஆளுமையாக மாற போகும் வரலாற்றின் சமிக்ஞையே இது.

இலங்கை விவகாரத்தில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் போது இலங்கை முழுவதும் இந்திய அரணில் தானே வந்து இணையும் போது சீனா சிதறு தேங்காயாக மாறி இருக்கும்.

இங்கு ‌அவரை அரவக்குறிச்சி யில் தோற்கடித்து மகிழ்ந்தவர்கள்‌ அன்று‌ தோற்றது அண்ணாமலை ஐபிஎஸ் இல்லை, நாம் தான், என்று முழுமையாக உணர்ந்து இருப்பார்கள். ஆனால் அதனால் எந்த பலனும் இருக்காது ….
இன்று வாஜ்பாய் ஆட்சியை அனைவரும் புகழ்கின்றனர்…அவர் ஆட்சி செய்யும் போது செய்ய விடாமல் தடுத்தே இவ்வளவு பெயர் என்றால், குறித்து வைத்து கொள்ளுங்கள் இதே மோடி ஆட்சியையும் அனைவரும் புகழ்வார்கள், அரசியலுக்காக மட்டுமே இன்று எதிர்க்கிறார்கள்…எதிர்காலத்தில் அண்ணாமலை ..மோடி யின் இடத்தை பிடிக்க சரியான நபர் என்பதையும் உலகம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

                                                                                         தேசிய பணியில்

                                                                                  ஜான்சி ராணி இந்துஸ்தானி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here