‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ ஆபத்தான இயக்கம்: கவர்னர்

0
236

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA  புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியது : பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றப்பின் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் இல்லை. அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான். அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுவதை ஏற்றுகொள்ள முடியாது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறிய ஆளுநர், இவர்கள் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருவதாகவும்,  தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பல நாடுகளுக்கு தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டை தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here