பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி

0
439

பிரேசில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு மேயர் இந்திராணி, கமிஷனர் கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தனர்.இப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் வில்லாபுரம் பகுதி செவி மாற்றுத்திறனாளியான ஜெர்லின் அனிகா பிரேசிலில் நடந்த 24வது பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டி ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவில் தலா 1 தங்க பதக்கம் வென்றார். இந்திய அணியின் பேட்மின்டன் குழு போட்டியிலும் ஒரு தங்கம் வென்றார். இம்மாணவி 2018 மலேசியா ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பின்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம், 2019 சீனாவில் சிறப்பு பிரிவினருக்கான 2வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் ஒரு தங்க பதக்கம் வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here