தமிழகத்தில் தொடரும் கிருஸ்துவ பாதிரிகளின் பாலியல் வன்கொடுமைகள்

0
433

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கிறிஸ்தவ (மிஷனரி) தேவாலயம் இருக்கிறது. மத போதகன் ஜோசப் செல்லையா என்பன் மகன் ஜோசப் ராஜா. மன வளர்ச்சி குன்றிய 14 வயதி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி இருக்கிறார். வீட்டில் தாய் இல்லாததைக் கண்ட அச்சிறுமி, தேவாலயத்துக்குச் சென்றிருக்கலாம் என்று கருதி, தாயைத் தேடி வந்திருக்கிறார். அப்போது, அவரை ஆசைவார்த்தை பேசி அழைத்துச் சென்ற மத போதகர் ஜோசப் ராஜா, அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இரவு வீடு திரும்பிய சிறுமி, அழுது கொண்டே ஏதோ சொல்ல முற்பட்டிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உற்று கவனிக்கவே, அச்சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார்கள்.மத போதகர் ஜோசப் ராஜா மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here