சந்திர கிரகணம் 2022

0
347

சந்திர கிரகணம் 2022: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட உள்ளது.

சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி தன்னைத்தானே சுற்றி சந்திர மேற்பரப்பை மறைக்கும்  போது ஏற்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) படி, முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் நிகழ்கிறது. மேலும், சூரியன், பூமி மற்றும் சந்திரனின் நிலையைப் பொறுத்து மூன்று வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன: முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் தெளிவற்ற சந்திர கிரகணம்.

2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்க்கப்படும். இருப்பினும், இந்தியாவில் கிரகணம் தெரியாது . IST படி, கிரகணம் மே 16 காலை 7:02 IST க்கு ஏற்பட்டு மதியம் 12:20 மணிக்கு முடிவடையும்.

இந்து மதத்தில், ராகுவும் கேதுவும் பௌர்ணமி இரவில் சந்திரனைப் பிடிக்க முயற்சிக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் எந்த சுப காரியங்களும் செய்வதில்லை, இதனால் மக்கள் பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே, சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு  கெடுதலானவை, மேலும் குழந்தை மற்றும் தாயின் நல்வாழ்வுக்காக கிரகணத்தின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், ஜோதிட நம்பிக்கையின்படி, கிரகணத்திற்கு முன் சமைத்த உணவை உட்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது.

 

தமிழில்:சகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here