அமர்நாத் யாத்திரை ஆலோசனை

0
500

அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30ம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், உளவுத்துறை , எல்லை பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் இணைந்து பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற உளவுத்துறை தகவலையடுத்து யாத்திரை மேற்கொள்வோருக்கு வழங்க வேண்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், வழக்கமான பாரம்பரிய முறைப்படி வரும் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு துவங்கவுள்ள அமர்நாத் யாத்திரை, இவ்வாண்டு 43 நாட்கள் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here