இன்று பட்டினப் பிரவேசம்

0
380

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா, மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்துக்குப் பின்னர், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தருமபுரம் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு 21ம் தேதி (நேற்று) குரு ஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். இதைத் தொடர்ந்து, மே 22ம் தேதி (இன்று) இரவு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். இதில், பல்வேறு ஆதீனகர்த்தர்கள், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here