கோயில் சிலை உடைப்பு

0
531

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சாமி சிலைகள் உடைப்பு, கோயில்கள் உடைப்பு என்பது தொடர்கதையாகி வருகிறது. அது ‘மர்ம நபர்கள்’ என்ற சிலரால் சில நேரங்களிலும், அரசு, சட்டம், ஆக்கிரமிப்பு என்ற பெயரால் நேரடியாக தமிழக அரசாலும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது மர்ம நபர்களால் இதே போன்ற மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, இலஞ்சி குமாரர் கோயிலின் பன்றி மாடசாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் சிலையை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பும், இப்பிரச்சனை குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here