மனித வளம் சம்பந்தப்பட்ட துறையில் ஏற்படும் எந்த ஒரு சீர்திருத்தமும் பல எதிர்ப்புகளை சந்தித்தே தீரும் .அக்னிபாத் அதற்கு விதிவிலக்கல்ல. எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை சந்திக்கும் நோக்கத்தோடு முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு நமது ராணுவத்தை வலிமைப்படுத்துவதற்காவே இந்த திட்டம். அமெரிக்காவின் ராணுவ வீரர்களின் பதவிக்காலம் 27 ஆண்டுகள் மட்டுமே நம் நாட்டில் 32 ஆண்டுகளாக உள்ளது வேகமும் துடிதடிப்பும் உள்ள இளைஞர்களின் பங்களிப்பு இக்கட்டான காலகட்டத்திற்கு குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதியில் குறைவான சீதோசன நிலையில் வேலை செய்வதற்கு சமீபத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சந்திப்பதில் குறைவான இளைஞர்களே இருந்தனர். கடைசியாக நடந்த கார்கில் போர் இதற்கு அத்தாட்சி. அந்தப் போரில் சிறப்பாக செயல்பட்டு பரம்வீர் சக்கரா விருது வாங்கிய 4 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்களே என்பது குறிப்பிடத்தக்கது .அக்னி பாத் வயது வரம்பை ஆறு வருடம் குறைத்துள்ளது. கூடுதலாக இத்திட்ட முடிவில் அதிகாரியாக தேர்வு பெறும் வீரர்கள் வழக்கமாக பதவி உயர்வு பெறுபவர்களை விட திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். ராணுவத்தின் பணியிலும் தொய்வு இல்லாமலும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உலக அளவில் கப்பற்படையிலும் விமானப்படைகளும் தொழில்நுட்பம் மிக்க ஆயுதங்கள் வழக்கத்தில் வந்துள்ளன. வலிமையான உடல் சமயோசித புத்தி உடையவர்களை நன்கு பரிசோதித்து தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு தேவை வந்துவிட்டது. இதற்கு முன்பு 3 அல்லது 5 நாட்கள் மட்டுமே பரிசோதனை செய்துவிட்டு பெரிய பொறுப்பில் அமர்த்தக்கூடிய நிலை தான் இருந்தது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து மூன்று வருடங்கள் பல அதிகாரிகளின் விதவிதமான பார்வையோடும் தீவிரமாக மதிப்பீடு செய்யக்கூடிய வசதி உள்ளது .இதன் மூலம் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு தகுதியான நபரை தேர்வு செய்து நிரந்தர அதிகாரியாக பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது. மேலும் இராணுவ அதிகாரிகளை திறமையானவர்களாகவும் நவீன ஆயுதங்களை கையாள்வதில் மதி நுட்ப வாய்ந்தவராக தயார் செய்ய முடியும் .பல விதமான பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை நீண்ட நாள் பணிக்கு தயார் செய்ய முடியும். 4 வருட பயிற்சி காலத்திற்கு பிறகு சேவா நிதி 11.78 லட்சத்தோடு 4 வருட ஊதியம் மற்றும் வங்கி கடன் உதவியோடு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக அக்னி வீரர்கள் இருப்பார்கள். இந்த அக்னிவீரர்களுக்கு CAPF, அசாம் ரைபிள் ,பாதுகாப்பு துறையிலும் , பணியில் சேர10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது தவிர பல மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன .பயிற்சி காலகட்டத்தில் பட்டதாரிக்குரிய திறமைகளில் 50 சதவீதத்தை அடைந்து விட்டதாக அங்கீகரிக்கப்படுகிறார்கள் .இன்றைய நவீன காலகட்டத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது .இதனால் ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு 1.47 லட்சம் கோடியிலிருந்து 4.7 லட்சம் கோடியாக கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது .இதில் ஓய்வூதியம் மாத சம்பளம் அடக்கம் .மாத சம்பளம் ஓய்வூதியமும் 10% இருந்து 59 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவை விட மூணு மடங்கு அதிகமாக சீனா ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு திட்டத்தின் மூலம் மக்களின் ஆதரவை கட்டாயப்படுத்தாமல் அதன் அவசியத்தை அரசு வலியுறுத்தி வருகிறது. எதிர்காலத்தில் உலக நாடுகளினால் வரும் சவால்களை சந்திக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டதே அக்னி பாத் திட்டம்.
– சந்திரசேகர்ஜி
balasekaran66@gmail.com